இராஜதந்திர ரீதியில் தலையிடத் தயாராகிறது கனடா

சர்வதேச கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சட்டவிரோதமாக முடக்கியுள்ளதற்குக் கனடா உள்ளிட்ட ஏழு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகப் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது.

கிணற்றில் இளம் தாய்: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: மூவர் கைது

மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிகாடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாவட்டப் புலனாய்வுப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கையினால் 24 மணித்தியாலங்களுக்குள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்

(தோழர் ஜேம்ஸ்)

பகலில் உண்ணா நோன்பு இருந்து சூரிய அஸ்தனமனத்துடன் நோன்பு துறந்து இறை வழிபாட்டில் ஈடுபடும் விதமாக உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும் நிகழ்வாக மாதம் ஒன்று ஒரு பிறையில் ஆரம்பித்து அடுத்த அதே பிறையில் முடிவதாக அமைந்த இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய பெரு விழா இது.

நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என சாடினார் ட்ரம்ப்

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு தராத நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிடுகையில்,

“போர் நீடித்தால் மேலும் சவால்கள் எழலாம்”

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்தும், அதன் காரணமாக உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் தற்போது விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எமது பாராளுமன்றத்திலும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலுக்கு இடமளிக்குமாறு முன்மொழிந்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

’உலக சுற்றுலாத் தலங்களை தாக்குவோம்’

உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளதுடன், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்ட பெண் கிணற்றில் சடலத்துடன் இருந்த அதிர்ச்சி சம்பவம்

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு ஊசலாடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

இஸ்ரேல்: பூனையாக இருந்து இன்று பூதம் என்றாக அம்பலப்பட்டது இலங்கையிலும்


(தோழர் ஜேம்ஸ்)

ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் புத்தளம் மாவட்டம், இரணவில (Iranawila) பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்ட அமெரிக்க தகவல் கோபுரம் “வாய்ஸ் ஆப் அமெரிக்கா” (Voice of America – VOA) வானொலி அலைபரப்பு நிலையமாகும்.

ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல்

ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்கு வைத்து கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சராயா அவ்லியா அல்-தாம் என்ற ஆயுதக் குழு அறிவித்துள்ளது.

உலக முடிவில் விழுந்த யாழ்.மாணவியை பத்திரமாய் மீட்ட இராணுவம்

நுவரெலியா, ஹோட்டன் சமவெளி (Horton Plains) பகுதியில் இன்று (19) காலை சுற்றுலா மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்றபோது சுமார் 40 மீற்றர் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்துள்ளார். இந்த மாணவியை இலங்கை இராணுவத்தினர், பத்திரமாய் மீட்டு, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.