அக்கரப்பத்தனையில் மீண்டும் கோவில்கள் உடைக்கப்பட்டன

அக்கரப்பத்தனை,டயகம பகுதிகளில் தொடர்ச்சியாக  கோவில்கள் உடைக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன. இந்நிலையில் இன்று (16) காலை அக்கரப்பத்தனை- கிளாஸ்கோ வல்லடையான் கோயில், மோனிங்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மற்றும்   கிளபோர்க் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆகியன இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு உண்டியல்களிலுள்ள பெருந்தொகையான பணமும் தங்க நகைகளும் களவாடப்பட்டுள்ளன.