செயற்கை நுண் அறிவின் 1980 தோற்றம்

முகம் மற்றும் அடையாளத்தை முடிந்தவரை மாற்றாமல், அந்தக் காலத்துக்கே உரிய உடைகள், தலைமுடி அலங்காரம், காலணிகள், பின்னணி மற்றும் புகைப்படத்தின் நிறத்தையும் AI மாற்றுகிறது.

ஆண்களின் புகைப்படங்களில் அடர்த்தியான மீசை, வித்தியாசமான ஹேர் ஸ்டைல், கூலர்ஸ், டெனிம் ஆடைகள், நீளமான காலர் சட்டைகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவை 1980களின் ஹீரோ தோற்றத்தை அப்படியே கொண்டு வருகின்றன.

பெண்களின் புகைப்படங்களில் புடவை, நகைகள், பெரிய கொண்டை, ரெட்டை ஜடை மற்றும் அக்காலத்து வண்ணமயமான ஆடைகள் இடம்பெறுகின்றன. இருப்பினும், சில புகைப்படங்களில் 80களின் தனித்துவமான தோற்றம் முழுமையாக வெளிப்படவில்லை என நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால், சமூக வலைத்தளங்களில் ஆண்களின் 80s AI புகைப்படங்களே அதிகம் கவனம் ஈர்ப்பதாகவும், சிலர் “பெண்களே, Better Luck Next Time” என நகைச்சுவையாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

1980களின் சினிமா, வித்தியாசமான ஹேர்ஸ்டைல், கலர்ஃபுல் ஆடைகள் மற்றும் ஃபிலிம் கேமராவின் தனித்துவமான நிறங்கள் என அந்தக் காலத்துக்கென தனி அடையாளம் இருந்தது. அதனை AI மூலம் மீண்டும் உருவாக்கிப் பார்க்க முடிவதால், இந்த டிரெண்ட் பலரையும் கவர்ந்துள்ளது.

நடிகர்கள், நடிகைகள், சமூக வலைத்தள பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல்வாதிகளும் இந்த 80s AI டிரெண்டில் இணைந்து வருகின்றனர்.

“நான் 80களில் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பேன்?” என்ற கற்பனையை ஒரே புகைப்படத்தில் கண்முன் கொண்டு வரும் இந்த AI டிரெண்ட், தற்போது சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்யமான பொழுதுபோக்காக மாறியுள்ளது.

Leave a Reply