பெருந்தோட்டப் பாடசாலைகளில் ரோபோடிக்ஸ் புரட்சி

ஹட்டன் சீடா கல்வி அபிவிருத்தி வளநிலையத்தில் இந்தப் பயிற்சி முகாம் க 2026 ஜூலை 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில், நடைபெற்றது. இதில் மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த தரம் 1AB பெருந்தோட்டப் பாடசாலைகளின் கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி செந்தில் வதனியின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மொத்தம் 14 பெருந்தோட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த 42 ஆசிரியர்கள் இதில் பங்கேற்று, ரோபோடிக்ஸ் தொடர்பான முழுமையான பயிற்சியைப் பெற்றனர்.

ஒவ்வொரு பாடசாலையிலும் ரோபோடிக்ஸ் கழகங்களை நிறுவுவதற்குத் தேவையான ஆரம்பகட்ட உபகரணங்கள் ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டன.

இன்றைய நவீன உலகில், மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனை, பிரச்சினைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதில் ரோபோடிக்ஸ் கல்வி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்திட்டத்திற்கு கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பிரிவு, ‘Ratnam Foundation (UK)’ மற்றும் ‘அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO – USA)’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து அனுசரணை வழங்கியுள்ளன.

மத்திய மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முன்னோடித் திட்டம், எதிர்காலத்தில் பெருந்தோட்டத் துறைசார்ந்த ஏனைய மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன் மூலம், மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தைத் தூண்டி, உலகத் தரத்திலான புத்தாக்கங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்கும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Leave a Reply