கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் வெளிநாட்டு கையிருப்பு 2.017 வீதம் சிறிய அளவிலான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் 6,458 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட கையிருப்பு, ஜூலை மாதத்தில் 133 மில்லியன் டொலர்களால் அதிகரித்து 6,591 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.
ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் நாட்டின் தங்கக் கையிருப்பு 1 மில்லியன் டொலரால் உயர்ந்துள்ளது.
ஜூன் மாதத்தில் 191 மில்லியன் டொலர்களாக இருந்த தங்கக் கையிருப்பு, ஜூலை மாதத்தில் 192 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.