மட்பாண்டப் பாவனையிலிருந்து விலகியதால் வியாதிகள் ஏராளம்

நவீன சமையல் பாத்திரங்களால் மனித சுகாதாரத்துக்கு பெரும் கேடு

மட்பாண்டம் என்பது பொதுவாக களிமண்ணால் செய்யப்படும் பொருட்களைக் குறிக்கும். மிகப் பழங்காலத்திலேயே மட்பாண்டங்களை செய்யும் நுட்பங்கள் கண்டறியப்பட்டன. மட்பாண்டங்கள் செய்வது உலகின் பல பகுதிகளிலும் மிகவும் ப​ைழமை வாய்ந்த தொழிலாக இன்னும் இருந்து வருகின்றது.

மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து, இன்று (12) மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையை நிர்மாணிபதற்காக, வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணியில், துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று (12), குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டன.

இதன்போது, குறித்த பகுதியில் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு, பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதுடன், குறித்த வளாக வாயில் கதவும் கண்ணிவெடியகற்றும் பணியாளர்களால் மூடப்பட்டது.

பின்னர், குறித்த இடத்தை பார்வையிட்ட நீதிபதி, குறித்த இடத்தின் ஆரம்பகால வரலாறுகளையும் இந்த விடயம் தொடர்பான வரலாறுகளையும், ஆராயுமாறு, மாங்குளம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததுடன், இன்று (13) குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

செருப்பு தைத்தவரின் மகனான

(Sutharsan Saravanamuthu)
செருப்பு தைத்தவரின் மகனான
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் இலிங்கன் February 12 இல் பிறந்தார், அவர்தான் ஜனநாயகம், மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு நடத்தப்படுகிறது’ என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தந்த தலைவன் ஆவார்,அவருக்கு என் இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள்!

இன்று கன்பொல்லை தியாகிகளின் 50 ஆவது நினைவுதினம்.

(12.02.1970 – 12.02.2020)

கன்பொல்லையில் வெடித்த குண்டுகளால் வடக்கு மாகாணமே அதிர்ந்தது. தமிழர் மத்தியில் தலைவிரித்தாடிய தீண்டாமைப் பேய் ஓடி ஒளிந்தது. விடுதலை பெற்று நிச்சாமம் போன்ற கிராமங்கள் நிமிர்ந்தது.

ஆம் ஆத்மியின் அபார வெற்றி சொல்லும் செய்தி என்ன?

மீண்டும் கேஜ்ரிவாலின் வெற்றிக்கொடி பிரம்மாண்டமாகப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி (ஆஆக) செய்த சாதனைகளை வைத்தே மக்கள் அந்தக் கட்சிக்குப் பெருவாரியான ஆதரவைத் தருவார்கள் என்று கணித்தது பொய்க்கவில்லை. பாஜக காட்டிய முனைப்புக்குப் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. ஷீலா தீட்சித் தலைமையில் (1998-2013) தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது என்றாலும், அதன் பிறகு தேசிய அளவில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியும், கட்சியின் அமைப்பு சீர்குலைந்ததும் காங்கிரஸுக்குத் தொடர் தோல்விகளையே அளித்துவருகிறது. இந்த முறை டெல்லியில் காங்கிரஸுக்கும் சில தொகுதிகளாவது கிடைக்க வேண்டும் என்று கட்சித் தலைமை முயன்றது; ஆனால், காங்கிரஸால் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியவில்லை.

டெல்லி தேர்தல்: மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடுகிறது ஆம் ஆத்மி

டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி அரசு அமைவது உறுதியாகியுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 8அம் திகதி நடந்து முடிந்தது. பெரும் பரபரப்படன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வந்தன.

இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தீவிரமாகப் பிரசாரம் செய்தது.

கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்குச் செய்த நலத்திட்டப் பணிகள், திட்டங்கள் போன்றவற்றைக் கூறி, கேஜ்ரிவால் பிரசாரம் செய்தார். அதேசமயம், 1998ஆம் ஆண்டுக்குப் பின் பாஜகவால் டெல்லி யில் ஆட்சியைப் பிடிக்கமுடியவில்லை. ஏறக்குறைய 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியை பாஜக மேற்கொண்டது.

அதேபோல காங்கிரஸ் கட்சியும், 2014-ம் ஆண்டுக்குப் பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த முறை காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி இருந்தாலும், பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் தீவிரமான போட்டி இருந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பகள் அனைத்தும் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்து இருந்தன.

இந்தநிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி பெரும்பான்மைக்குத் தேவையான 36 இடங்களை விடவும் கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்றது.

நண்பகல் நிலவரப்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 57 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் சூழல்இருந்தது. எதிர்க்கட்சியான பாஜக 13 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் எந்தத் தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி 53.29 சதவீத வாக்குகளையும், பாஜக 39.05 சதவீத வாக்குகளையும் பெறும் சூழல் உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் 4.17 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் நிலை உள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் இந்து சமுத்திரத்தில் இன்று (12) அதிகாலை 2.34 மணியளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவில், தென்கிழக்கு கடற்பிராந்தியந்தில் 5.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது​.

கொரோனா உயிர்பலி எண்ணிக்கை 910 ஆக அதிகரிப்பு

கொரோனா கிருமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 910 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் மாத்திரம் 908 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஹெங்கொங் நாடுகளை சேர்ந்த தலா ஒவ்வொரு பிரஜையும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, ஹூபெய் (Hubei) மாநிலத்தில் மேலும் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனா தலைநகரத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 40,000ஐத் தாண்டிவிட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனப் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து பலர் பணிக்குத் திரும்பும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

எனினும், உணவு, மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் உடனடியாக தங்கள் பணிகளைத் தொடங்கிவிடவேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்து வருகின்றனர்.

கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சீன அமைச்சரவையின் ஊழியர்கள் வெவ்வேறு குழுக்களாக பணியாற்றுவர்.

முக்கிய துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களைக் கருத்திற்கொண்டு சுமுகமான போக்குவரத்துக்கு சீன அரசாங்கம் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

பகடிவதை: எண்மருக்கு இடைக்காலத் தடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கிளிநொச்சி வளாகத்தில், பகடிவதையில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு, இன்று (10) முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.