இந்தியாவில் கல்விகற்ற 113 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

(க. அகரன்)

அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு திட்டத்தில், இந்தியாவுக்கு அகதிகளாக சென்று கல்விகற்று பட்டம் பெற்ற 113 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என, வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

’19ஆவது திருத்தம் நீக்கப்படும்; புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்’

பல்வேறு அரசியல் முரண்பாடுகள் காரணமாக 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

19ஐ நீக்கி, 20ஐ உருவாக்க அமைச்சரவை அனுமதி

அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததினை நீக்கி, 20ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணியம்

இலங்கையில் தமிழ்பேசும் மக்களைப்போல சுமார் 20 மடங்கு தமிழர்கள் இந்தியாவில் உள்ளார்கள்.
ஆனால் நான் தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களும் சுற்றியுள்ளேன் இலங்கையில் உள்ள பிரதேச பிரிவினைகள் வெறுப்புகள் கிடையாது.
ஆனால் ஒரு சிறு இனக்குழுவான நமக்குள் இது விசமாக ஏன் இருக்கிறது என சிந்தித்தால் அதற்கான விடை யாழ்ப்பாணிகள்.

அறுதிப் பெரும்பான்மையில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம்

(மொஹமட் பாதுஷா)

சுதந்திர இலங்கையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றிலிரண்டு அறுதிப் பெரும்பான்மையுடனான ஆட்சியை இம்முறை, பொதுஜன பெரமுன நிறுவிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பலம், ஆட்சியாளர்களுக்குத் தாம் நினைத்ததைச் செய்யக் கூடிய இயலுமையை வழங்கும். இதற்காகவே, படாதபாடுபட்டு 150 ஆசனங்களைப் பொதுஜன பெரமுன பெற்றிருக்கின்றது.

எஸ்.பி.பி பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை

பாடகர் எஸ்.பி.பி.க்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையின் ஒரு பகுதியாக, அவர் பாடிய பாடல்கள் வைத்தியசாலை அறையில் ஒலிக்க விடப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதல் கொரோனா தடுப்பூசி காப்புரிமை வழங்கிய சீனா

கொரோனா வைரஸின் பிறப்பிடம் என கருதப்படும் சீனாவில் அந்த வைரசை தடுக்க உருவாக்கப்பட்ட தடுப்பூசிக்கான முதல் காப்புரிமையை சீன அரசு அளித்திருக்கிறது. இதுபற்றி சீன அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான தி பீப்பில்ஸ் டெய்லி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றில் பலகுரல்களில் பேசுதல்: சாத்தியங்களும் சவால்களும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

தமிழ் நாடாளுமன்ற அரசியல் பெரும்பாலும் ஏதோவோர் அந்தத்திலேயே இயங்கி வந்திருக்கிறது. ‘ஏக பிரதிநிதித்துவம்’, ‘கூட்டான மக்கள்தெரிவு’, ‘வலுவான பேரம்பேசல் சக்தி’ என்று காலகாலத்துக்குப் பெயர்களும் கோரிக்கைகளும் மாறினாலும் கடந்த இருபது ஆண்டுகளில் மக்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்துள்ளார்கள். ஆனாலும் மாற்றுக் குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தன. அவை இணக்க அரசியலை ஒருபுறமும் எதிர்ப்பு அரசியலை மறுபுறமும் கொண்டதாக இருந்து வந்திருக்கிறது. இம்முறை நாடாளு மன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவ்வாறல்ல.

தேசியபட்டியல் அடிபிடிகள்

(என்.கே. அஷோக்பரன்)

பௌத்தத்தில், ‘மோஹ’ (மாயை), ‘லோப’ (பேராசை), ‘தோஷ’ (வெறுப்பு) என, மூன்று விசங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவையே ‘தன்ஹா’” எனப்படும் அடங்கா ஆசையின் வேர்கள் என்று குறிப்பிடப்படுவதோடு, இவை துன்பத்தை விளைவிக்கும் முக்கிய காரணிகள் என்றும் பௌத்தம் போதிக்கிறது.

‘குரங்கின் கை பூமாலை’யான கூட்டமைப்பு

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கான பின்னடைவை, இந்தப் பொதுத் தேர்தலில் சந்தித்து நிற்கின்றது. 2015ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, கூட்டமைப்பு சுமார் ஒரு இலட்சத்து 88 ஆயிரம் வாக்குகளை, இந்தத் தேர்தலில் இழந்திருக்கின்றது.