“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் சமூகத்தின் சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படையினரின் மூலம், கடலில் முக்கியமான சுகாதாரம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்திற்கு கல்வி கற்பிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு பயிற்சித் திட்டத்தை 2025 ஏப்ரல் 11 ஆம் திகதி அன்று வாழைச்சேனை மீன்வளத் துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
Month: April 2025
சீன பொருட்களுக்கான வரியை 245 சதவீதமாக உயர்த்திய அமெரிக்கா
சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏப்ரல் 2ஆம் திகதி பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். இதையடுத்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்திய 60இற்கும் மேற்பட்ட நாடுகளின் வரியை நிறுத்தி வைத்தார்.
பிள்ளையான் கண்ணீர் விட்டு அழுதார்;கம்மன்பில
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’ கிழக்கில் நடந்த கடத்தல் வழக்கு தொடர்பாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அரசாங்கம் கூறுவது போல் 2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் பிள்ளையானுக்குத் தொடர்பில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பெண்புலியும், என்/எங்கள் அனுபவங்களும்…
“நிரோமியின் தாயார் இந்திய வம்சாவளியினராய் இருந்தததால் நிரோமியின் தாயை, தகப்பனின் உயர்சாதி சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே இருக்கின்றது. 77ம் கலவரத்தின் பின் நோர்ட்டன் பிரிட்ஜிலிருக்கும் தகப்பன் இனி சிங்களப்பகுதியிற்குள் இருப்பது ஆபத்தென யாழ்ப்பாணத்திற்கு இவர்களை அனுப்பிவிட்டு வேலைக்க்காய் மத்திய கிழக்கிற்குப் போய்விடுகின்றார்.

சுவரோட்டி அரசியல் சதாரணமானது அல்ல
வருடப் பிறப்பு அனர்த்தங்களில் 80 பேர் பாதிப்பு
புது வருடப் பிறப்பான நேற்று ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பட்டாசு தொடர்பான விபத்து ஒன்றில் காயமடைந்த ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையானுடன் உரையாட அனுமதி கோரிய ரணில்?
இன்றும் நாளையும் விசேட பஸ் சேவை
தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் வெப்பநிலை
வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், வெப்பக் குறியீடு அல்லது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான வானிலையால் சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்படும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
