சுதந்திர இலங்கையின் அபிவிருத்தித் திட்டமிடல்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அபிவிருத்தித் திட்டமிடல் என்பது அடிப்படையில் புதிதாக சுதந்திரம் அடைந்த நாடுகளுக்கு மிகவும் அத்தியாவசியமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சுதந்திரமடைந்த நாடுகளில் சோசலிசத்தைத் தழுவிக் கொண்ட நாடுகள் அபிவிருத்தித் திட்டமிடலைச்  சோசலிசப் பொருளாதாரங்களுக்கு ஏற்ற ஒரு கருவியாக வெற்றிகரமாகப் பயன்படுத்தின.

பட்டலந்த மீதான விவாதம் அடுத்த மாதம்

படலந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மீதான அடுத்த விவாதத்தை மே மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாத விவாதத்திற்கான திகதியை அடுத்த வாரம் நடைபெறும் பாராளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மார்ச் இல் தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் உயர்வு

மார்ச் 2025 இல் தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது, இது மார்ச் 2024 இல் பதிவான 572.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் பிப்ரவரி 2025 இல் 548.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.

’’பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எதிர்காலத்தில் ஒழிக்கப்படும்’’

“ஒரு வளமான நாடு மற்றும் ஒரு அழகான வாழ்க்கையை” நோக்கமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

நாட்டையும் மக்களையும் வெற்றி பெறச்செய்வதற்காக இந்தப் புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துக்காக ஒன்றுபடுவோம் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என்று  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவுக்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகின்றோம்.

வீழ்ச்சியடைந்திருந்த நமது நாட்டை கடந்த சில மாதங்களாக மீண்டும் கட்டியெழுப்பி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக புதிய நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம். அந்த வெற்றிகள் அனைத்தும் இந்நாட்டு மக்களுக்கே உரித்தாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையே நாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

சவால்களுக்கு மத்தியில் சரிந்துவிடாமல் நாட்டுக்காக நமது பொறுப்பை மேலும் வலுவாக நிறைவேற்றும் துணிச்சல் எமக்கு உள்ளது. மேலும் பூகோள அரசியலைப் போன்றே தேசிய ரீதியாக நாட்டின் முன்பிருக்கும் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான திட்டங்களை அரசு தற்போது செயற்படுத்தி வருகின்றது.

மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பௌதீக மற்றும் ஆன்மீகத் தொடர்புகளின் தனித்துவம் புத்தாண்டு மரபுகளினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவை சிங்கள மற்றும் தமிழ் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட வரலாற்று பிணைப்பு மற்றும் சகவாழ்வின் உயிர்ப்புள்ள சான்றாக விளங்குகின்றன.

இன்றைய சமூகம் பல்வேறு பிரிவுகளால் வேறுபட்டிருந்தாலும், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் அத்தகைய பிரிவுகளைக் கலைந்து சமூகத்துக்குள் மீண்டும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

சகவாழ்வை ஊக்குவித்து மற்றவர்கள் மீது கருணை காட்டும் ஒழுக்கத்தின் இருப்பை எமக்குள் எற்படுத்திக்கொள்வதே இந்தப் புத்தாண்டில் நமது பொறுப்பாகும்.

மேலும், மக்கள் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளவும் பிற்போக்கான  மனப்பாங்கு மற்றும்  சிந்தனை அற்ற புதிய மனிதனை உருவாக்குவதுமே சூரிய பெயர்ச்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் பொதுவான எதிர்பார்ப்பாகும். இவ்வாறு நாம் புதிதாவதால் மாத்திரமே புத்தாண்டு நமது வாழ்விற்கு புதிய ஆரம்பத்தை தரும்.

நாட்டுக்குத் தேவையான புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்காகவும், நாட்டையும் மக்களையும் வெற்றி பெறச் செய்வதற்காகவும் இந்தப் புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துக்காக ஒன்றுபடுவோம் என அனைவருக்கும்  நான் அழைப்பு விடுக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஒளிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களோடு மக்களாய்…..SDPT

உள்ளுர் ஆட்சி சபைத் தேர்தலில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)யினர் அம்பாறை மாவட்lத்தில் அவர்களின் கட்சிச் சின்னமான மெழுகு திரிச் சின்னத்தில்

விருந்துபசார ஏற்பாடுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய  அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

’முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர நடவடிக்கை’

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்களை ஆரம்பித்து, கிராமிய மக்களை தேசியப் பொருளாதாரத்தில் ஈடுபடுத்த தேவையான முதலீடுகளை கிராமங்களுக்குக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இசைமுரசு நாகூர் ஹனீபா

இசைமுரசு அவர்களின் 10வது நினைவு நாள் நாளை /04/2024.இசைமுரசு அவர்களைப் பற்றி பற்றி சமநிலை சமுதாயம் என்ற பத்திரிகையை மே 2015 ஆம் ஆண்டு இதழில் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எழுதிய “மூச்சடங்கிய கம்பீரம்” என்ற நினைவலைகளை தங்களுக்கு இன்று பதிவிடுகிறேன்.

பெண்ணை ஒரு போலீஸ் அதிகாரி காப்பாற்றினார்

கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து பாய்ந்த பெண்ணை ஒரு போலீஸ் அதிகாரி காப்பாற்றினார். கடுகஸ்தொட்டை காவல் பணியில், கட்டுகஸ்தொட்டை பாலத்திலிருந்து ஒரு இளம் பெண் கீழே விழுந்ததாக, அப்பகுதிக்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் 103984 ஹேரத் அதிகாரிக்கு உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, உடனடியாக செயல்படுத்தப்பட்ட அதிகாரி, பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் குதித்து அந்த இளம் பெண்ணையும் காப்பாற்றியுள்ளார். இளம் பெண் கட்டுகஸ்தொட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர்.தற்போது அந்த இளம் பெண் மேலதிக சிகிச்சைக்காக கட்டுகஸ்தொட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.