தொண்டீஸ்வரம்

தொண்டீஸ்வரம் இலங்கையின் தொன்மையான பஞ்ச ஈச்சரங்களுள் ஒன்றாக தென் பகுதியில் உள்ள தேவேந்திர முனையில் மாத்தறையில் காணப்பட்டதாகவும் போர்த்துக்கீசர் காலத்தில் அழிவுற்றதாகவும் வரலாறு கூறுகிறது.

தேவேந்திர முனைப்பகுதியில் கோபுரமும் விக்கிரகங்களும் அகற்றப்பட்டு வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இன்றி தொல் பொருளியல் திணைக்களத்தினால் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில் புராதன சிவாலயங்களை ஒத்திருக்கும் இந்தக் கட்டிடம் ஏன் தொண்டீஸ்வரத்தின் சிதிலமாக இருக்கக் கூடாது ? அருகாமையில் வசிக்கும் தென் பகுதி மக்களினால் இது இராவணனினால் வழிபட்ட தலமாக கருதப்படுகிறது. இதை ஆய்வு செய்வதற்கு தமிழ் ஆர்வலர்கள் முன்வரவேண்டும்

அத்துமீறிய செயற்பாடு அகற்றப்பட்டது

(Karunaivel Ranjithkumar)

புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்து மீறி வாடி அமைத்த விவகாரம்; ரவிகரன் எம்.பியின் வலியுறுத்தலையடுத்து வாடியை அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு, சந்தேகநபருக்கும் சட்டநடவடிக்கைமுல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை இனத்தவர்களால் அமைக்கப்பட்ட வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியநிலையில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன் அவர்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்றுமாறு குறித்தபகுதியில் 11.04.2025இன்று அறிவித்தலைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

‘கலிப்சோ’ ரயில் சேவை ஆரம்பம்

‘கலிப்சோ’ எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட ரயில் சேவை, நானுஓயா மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இடம்பெறும்.

மரணப் பொறியாகி துர்நாற்றம் வீசும் பொலிஸ் நிலையங்கள்

“குற்றம் மற்றும் வன்முறை குறித்த அச்சமின்றி நம்பிக்கையுடன் வாழக் கூடிய சமாதானம் மிக்க சூழல் ஒன்றை உருவாக்கல்” என்பது இலங்கை பொலிஸின் நோக்கமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்: போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது. 19 வயதான இந்தச் சந்தேக நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகளும் 465 கிராம் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டன.

மலையக சமுதாயத்தை ஒன்றினைக்கும் வகையில் உலக சாதனை படைக்கும் முகமாக மலையகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆர்.எ.விக்னேஸ்வரன் இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி 22 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவில் 9 மீனவர்கள் கைது

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் வியாழக்கிழமை (09)  இரண்டு படகுடன் கைது செய்யப்பட்ட ஒன்பது  மீனவர்களும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும்  16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கெஹெலிய மீண்டும் சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசி சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்கவே அங்கு அவர் முன்னிலையானார்.

CMC உட்பட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தடை நீக்கம்

கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்காக மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டது.

மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் (PPA) கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த மின் நிலையத்தின் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டை சஹஸ்தனவி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.