சட்ட விரோத மணல் கொள்ளை

யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பிச்சென்ற  கனரக வாகனம் மீது கொடிகாமம் பொலிஸார்  செவ்வாய்க்கிழமை (20) அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அர்ச்சுனாவின் நாகரீகமற்ற பேச்சுக்கள் தொடர்கின்றன…

சில நாட்களுக்கு பின்னர் பாராளுமன்றத்தில், இன்று (20) உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உரையாற்றும் போது, அவருக்கு முன்னதாக பேசிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் உரையை கேலி, கிண்டல் செய்தார்.

மூடப்பட்டது “நெக்ஸ்ட்” ; 2000 பேருக்கு நெருக்கடி

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்திருந்த, சுமார் 2,000 ஊழியர்களை பணியமர்த்திய நெக்ஸ்ட் ஆடை உற்பத்தி தொழிற்சாலை , செவ்வாய்க்கிழமை  (20)  முதல் திடீரென காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

அனுரவுக்கு குருசாமி நிபந்தனையற்ற ஆதரவு

கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட கே.ரி . குருசாமி தலைமையிலான சுயேட்சைக்குழு 4 ( லாந்தர் சின்னம் -2 உறுப்பினர்கள்), தேசிய மக்கள் சக்திக்கு கொழும்பில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்க உறுதிமொழி அளித்தது.

சஜித் பிரேமதாச தலைமையிலான கலந்துரையாடல்

நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில், எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல் இன்று ​செவ்வாய்கிழமை (20) காலை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

“SLPP,UNP,SJB இன் பலர் பாதாள உலகத்துடன் தொடர்பு”

பாதாள உலக நடவடிக்கைகளுடன் நேரடி அரசியல் தொடர்புகளை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, விசாரணைகளுக்குப் பிறகு அத்தகைய அரசியல்வாதிகளின் பெயர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேர்வின் சில்வா, பிரசன்னவின் விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி ஹம்சி

(Mohamed Ali Yaseer Arafath)

சிறுமி ஹம்சி விடயத்தில் இருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் முதலாமவர் பாடசாலை ஆசிரியர் அவர் மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பிணையில் இருப்பவர்.இரண்டாம் நபர் டியூசன் உரிமையாளர் அந்த சிறுமியை டியூசன் வர தடை விதித்தவர்.

எந்தவொரு போரும் எழாமல் தடுப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு – அனுர குமார திசாநாயக்க

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்தார்.

ஐ.தே.க- ஐ.ம.ச உடன்பாடு

எதிர்க்கட்சி பெரும்பான்மையாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து பணியாற்றவும் நிர்வகிக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) சமகி ஜன பலவேகயவும் (SJB) ​(ஐக்கிய மக்கள் சக்தி)  ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன.