வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது

புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

18.3 வீதத்தால் அதிகரிக்கும் மின்சார கட்டணம்?

செலவுகளை ஈடுசெய்ய மின்சார கட்டணங்களை 18.3% அதிகரிக்க வேண்டும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில், நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 

ஈஸ்டர் தாக்குதலுக்கு உதவியோர் விடுதலை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட பத்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண் சந்தேக நபர்களை விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சிரியா பற்றி ட்ரம்ப் புதிய அறிவிப்பு

ரியாத் நகரில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்துக்கு முன்பு, அகமது அல்-ஷாராவை அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் சந்தித்தார்.  மூடப்பட்ட அறைக்குள் நடந்த சந்திப்பில், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2000ஆம் ஆண்டுக்கு பிறகு, இரு நாடுகளின் தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும். 

நாட்டை சுற்றி கடல் இருந்தாலும் உப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு நீங்கவில்லை. மரக்கறிகளின் விலைகள் எகிறியுள்ளன. இந்நிலையில், நாட்டில் உப்புக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்த பிள்ளையான்

கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ளார். 

பேருந்து ஓட்டுநர் தூக்கம்: கொத்மலை பஸ் விபத்துக்கு காரணம்

கண்டி-நுவரெலியா வீதியில் கொத்மலை கரடி எல்ல பகுதியில் 23 பேரின் உயிரைப் பறித்து பலரைக் காயப்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள் வியாழக்கிழமை(15) அன்று, ஸ்தலத்தை   பார்வையிட்டு விபத்துக்குள்ளான பேருந்து குறித்து முறையான விசாரணையைத் தொடங்கினர்.

காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இருவர், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர், பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். தவிசாளராக  எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதித் தவிசாளராகவும்  எம்.ஐ.எம்.ஜெஸீம் நியமிக்கப்பட்டுள்ளார்.  

விசேட சோதனை நடவடிக்கை

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் கினிகத்தேனை பொலிஸாரால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

கொழும்பு – கொட்டாஞ்சேனை சிறுமியின் மரண விசாரணைகள் கைவிடப்படாமல் தொடர்கின்றன

கொழும்பு – கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.