3 மொசாட் உளவாளிகளை தூக்கிலிட்ட ஈரான்

இஸ்ரேல் ஈரான் இடையே எப்போதும் மோதல் இருந்தே வந்துள்ளது. ஈரான் நாட்டில் அரசிலேயே கூட பல்வேறு நிலைகளில் இஸ்ரேலின் மொசாட் உளவாளிகள் ஊடுருவி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே சமீபத்தில் நடந்த மோதலில் முதல் நாளே ஈரானின் டாப் தலைவர்களை இஸ்ரேலால் துல்லியமாகக் கொல்ல முடிந்தது. இதற்கிடையே இஸ்ரேல் உளவாளிகள் எனச் சொல்லி 3 பேரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

சுகாதார அமைச்சின் முன்னாள்  செயலாளர் ஜனக சந்திரகுப்தா  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால், வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டார். ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்ததன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

ஒருவருக்கு மட்டுமே இருக்கும் புதிய ரத்த வகை

இதுவரை இல்லாத முற்றிலும் புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது. இந்த புதிய ரத்த வகையை இப்போது சர்வதேச ரத்த மாற்றச் சங்கமும் அங்கீகரித்துள்ளது. EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை உலகிலேயே ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நில அதிகாரிக்கு 22 ஆண்டுகள் சிறை

மரம் வெட்ட அனுமதி வழங்குவதற்காக நில உரிமையாளரிடமிருந்து ரூ.100,000 லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நில அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை புதன்கிழமை (25)  விதித்தார்.

புதிய தலைமைத் தளபதி நியமனம்

இராணுவத்தின் 67வது தலைமைத் தளபதியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 26 ஆம் திகதி முதல் அமுக்கும் வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை தொடக்க கூட்டம் தொங்கியது

கொழும்பு மாநகர சபையின் முதல் பொதுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் சட்டப்பூர்வமானது அல்ல என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார்  கூட்டத்தை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

ஹட்டனை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தவிசாளர் பதவி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொண்டது. பிரதி தவிசாளர் பதவி, பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான  இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்குச் செல்கிறது.

செம்மணி

(Vijaya Baskaran)

செம்மணி என்றதும் சுடலைதான் நினைவுக்கு வரும். இது இறந்த மனிதர்களை எரிக்கும் மயானம். இப்போது இங்கே புதைகுழிகளைத் தோண்டி இறந்துபோன பிணங்களை எடுக்கிறார்கள்.

நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயர் பரிந்துரை

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

பாராளுமன்ற தூதுக்குழுவினர் சீனா செயலமர்வில் பங்​கேற்பு

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வில் கலந்துகொள்வதற்காக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை   அமைச்சர் சுனில் குமார கமகே தலைலமையிலான இலங்கை பாராளுமன்றக் குழுவினர் சீன மக்கள் குடியரசுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.