மாகாணசபைகளை அர்த்தமுள்ளதாக்க செயற்பட வைக்க சந்திப்புகள் தொடர்கின்றன

சமத்துவகட்சியின் தலைவர் தோழர் மு.சந்திரகுமார் அவர்களை முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தோழர் அ. வரதராஜசப்பெருமாள் கிளிநெரச்சியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் இன்று (19.07.2025) சந்தித்து கலந்துரையாடினார்.

மாகாணசபைகளை அர்த்தமுள்ளதாக்க செயற்பட வைக்க சந்திப்புகள் தொடர்கின்றன

ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தோழர் அ. வரதராஜசப்பெருமாள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் இன்று (19.07.2025) சந்தித்து கலந்துரையாடினார்.

அந்நியரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை பார்க்க பெற்றோர் விரும்புவதில்லை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது  மூத்த மாணவர்கள் துரத்திச் சென்று அடித்து காயப்படுத்தியதாக அறியப்படுகிறது.

கிருலப்பனையில் 21 இந்திய பிரஜைகள் திடீர் கைது

கிருலப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில்  சட்டவிரோதமாக தங்கியிருந்த 21 இந்திய பிரஜைகள் இன்று (18) காலை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 

இலங்கையில் பாடசாலை மாணவிகளிடையே அதிகரிக்கும் கர்ப்பம்

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் சாந்தனிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு

முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் உலர் வலய மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஒருவரை நியமித்ததன் மூலமும், அமைச்சின் செயலாளரை தனது நண்பர்களை அதன் திட்டங்களுக்கு சட்டவிரோதமாக நியமிக்கத் தூண்டியதன் மூலமும் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததாகக் கூறி, முன்னாள் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரும், உலர் வலய மேம்பாட்டு அமைச்சருமான சாந்தனி பண்டாரவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணையம் தாக்கல் செய்த வழக்கை வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார நேற்று (18) உத்தரவிட்டார். 

வவுனியாவில் பண்பாட்டு விழா ஊர்திப் பவனி

மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியா பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு ஊர்திப் பவனி சிறப்பாக இடம்பெற்றது.

மீண்டும் வாகன இறக்குமதியில் மோசடி : ஒருவர் கைது

ஜப்பானிய வாகன இறக்குமதியில் சுமார் 20 மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை குற்றப்புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.  மஹரகமவில் வசிக்கும் அவர், ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 18 வாகனங்களுக்கான ஆரம்பக் கொடுப்பனவுகளைத் தவிர்த்து, அதன் மூலம் அந்தப் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான நிதியை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  அவர் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு மொத்தம் 68 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.