கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்பட்டது. இதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு 1250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும்.
Month: July 2025
ரத்தரங் மருமகன் நீதிமன்றத்தில் சரண்
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, மத்துகம நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய கார் ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் அவர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
”எந்தவொரு மாணவரும் பாடசாலையிலிருந்து இடைவிலக கூடாது” – அனுர
ரஷ்ய விமான விபத்து;பயணித்த அனைவரும் பலி
இலங்கையில் வளர்ந்து வரும் அருங்காட்சியகம்
வட்டவன் பகுதி விவகாரம் – எதிர்ப்பால் தீர்மானிப்பது இடைநிறுத்தம்
கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு
தமிழ் மக்களின் வாழ்வியல் வரலாற்றில் மறக்க முடியாத, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகள் அழிக்கப்பட்ட, இன அழிப்பு களில் ஒன்றான கறுப்பு ஜூலையை நினைவு கூறும் முகமாக பொது நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை (23) அன்று மாலை திருகோணமலை கடற்கரையில் உள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கில் இடம் பெற்றது. இதனை திருகோணமலை நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.
கன்னியா வெந்நீரூற்றில் பிக்கு அடாவடி
கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில், ஆடி அமாவாசை பித்ரு கடமைகளை வியாழக்கிழமை (24) செய்தவர்கள் தானமாக வழங்கிய 100 கிலோ கிராமுக்கும் அதிகமான மரக்கறிப் பொருட்கள் மற்றும் பூஜை செய்வதற்கு பயன்படுத்திய பொருட்கள் என்பவற்றை ஏற்றிச் செல்ல வந்த முச்சக்கர வண்டியை,பொருட்களை ஏற்ற விடாது தடுத்து அந்த இடத்தில் இருந்து முச்சக்கரவண்டியை வெளியேற்றி, அடாவடியில் ஈடுபட்டார் அப்பகுதியில் உள்ள பெளத்த பிக்கு.
லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது
கொம்பனி வீதிபொலிஸ் நிலையத்தை சேர்ந்த பிரதி ஆய்வாளர் ஒருவர், லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த கைது நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட அதிகாரி ரூ. 100,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது