வெசாக் போயா தினத்தன்று ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நீதிமன்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய அதுல திலகரத்னவுக்கு, அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி டாக்டர் நளின் டி ஹேவாவசம் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். வழக்கு தொடுத்த மருத்துவருக்கு ரூ. 4 மில்லியன் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Month: July 2025
மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில், எதிர்வரும் திங்கட் கிழமை (28)ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
40 நாடுகளுக்கு விசா கட்டணத்தை நீக்க தீர்மானம்
219 மருந்தகங்களின் உரிமம் ரத்து: அமைச்சர்
பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு
தாய்லாந்து – கம்போடியா ராணுவ மோதலால் பெரும் பதற்றம்: 1,38,000 மக்கள் தஞ்சம்
தாய்லாந்து – கம்போடியா இடையே நடைபெற்று வரும் ராணுவ மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, எல்லை பகுதியில் வசிக்கும் இரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இடத்தை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து வருகின்றனர். தாய்லாந்து எல்லையில் இருந்து 1,38,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை இனவழிப்புக்கு எதிர்ப்பு: மானிப்பாய் உறுப்பினர் வெளிநடப்பு
மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது இன்றைய தினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் லோக பிரகாசம் ரமணன் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துவிட்டு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதன்போது சபையின் உப தவிசாளரும் வெளிநடப்பு செய்தார்.
“மாகாண சபைகளை பலவீனப்படுத்த முயற்சி”
இதுவரை 74 துப்பாக்கிச் சூடு; 40 பேர் பலி
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வியாழக்கிழமை (24) வரை நாடு முழுவதும் 74 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றில் 56 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே நடந்துள்ளன.இவற்றில் 40 பேர் இறந்துள்ளனர், சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். கல்கிசை பொலிஸ் பிரிவில் மட்டும் இதுவரை 08 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன, இதில் இரட்டைக் கொலை உட்பட 04 கொலைகள் மற்றும் 04 துப்பாக்கிச் சூடு முயற்சிகள் அடங்கும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.