சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல நாட்டில் “குற்ற அலை” இல்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நேற்று (11) தெரிவித்தார். கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றவியல் கும்பல்களுக்கு சில அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்ததாக அவர் கூறினார். ஊவா மாகாண குற்றவிசாரணை பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது, பதில் பொலிஸ் மா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Month: August 2025
முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்…!
முத்தையன்கட்டு சம்பவம் – 5 இராணுவத்தினர் கைது
இந்தியா: நாட்டின் மிக நீளமான சரக்கு ரயில் அறிமுகம்
புதுடெல்லியில் நாட்டின் நீளமான சரக்கு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயிலானது 354 வேகன்களுடன் 4.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைந்துள்ளது. நாட்டின் மிக நீளமான சரக்கு ரயில் என்ற பெருமையை பெற்றுள்ள இதற்கு ருத்ராஸ்த்ரா என்று பெயர் சூட்டியுள்ளனர்.
கொழும்பின் ஆபத்தான் பகுதிகள் கண்டுபிடிப்பு
இல்மனைட் அகழ்வு: கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸார்
இன்று முதல் Online நுழைவுச்சீட்டு விநியோகம்
இந்திய மீனவர்கள் 07 பேருடன் படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், சனிக்கிழமை (09) அன்று பிற்பகல் மன்னாருக்குவடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்நாட்டு நீர்பரப்பில் சட்டவிரோத மீன்பிடிநடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகு கொன்றையும் (01) இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
சமஸ்டியை வலியுறுத்தி மக்கள் போராட்டம்
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் 100 நாள் செயன்முனைவின் 10 ஆவது நாள் நிகழ்வு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) அன்று திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட திரியாய் கிராமத்தில் இடம்பெற்றது. பல வழிகளிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட திரியாய் மக்கள் தொடர்ந்தும் நில அபகரிப்புக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இன்றைய தினம் கூடிய மக்கள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வினை அரசிடம் வலியுறுத்தினர். இதில் பெருமாபாலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இளைஞர் கழங்கள்;ஜே.வி.பியின் பணயக்கைதி
நீண்ட காலமாக, நமது நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்த இளைஞர் கழங்கள் இப்போது முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்தின் பகடைக்காயாக மாற்றப்பட்டு, ஜே.வி.பி.யின் அரசியல் பிடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
