ஏழாண்டுகளில் முதற் தடவையாக சீனா செல்லவுள்ள மோடி

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கால் நடாத்தப்படவுள்ள ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இம்மாத இறுதியில் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செல்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக 2018ஆம் ஆண்டு ஜூனிலேயே சீனாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.

ட்ரம்ப்பின் 50% வரி விதிப்பும், இந்தியா மீதான பொருளாதார தாக்கமும்

இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக பொருளாதார நிபுணர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி நிதியத்துக்குள் புகுந்து விளையாடிய பெருச்சாளிகள்

வறுமை ஒழிப்பு, கல்வி அல்லது ஞானத்தின் வளர்ச்சி, மதங்களின் எழுச்சிக்கு பங்களிப்பு செய்தல், நாட்டுக்கு சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கல், ஜனாதிபதி மற்றும் ஆட்சிமன்றக்குழு குழுவின் கருத்துப்படி, பொதுமக்களின் நலனுக்கான பணிகளைச் செய்தல் ஆகிய குறிக்கோள்களை அடிப்படியாகக் கொண்டு, ஜனாதிபதி நிதியம் 1978ஆம் ஆண்டின் 7ஆம் இலக்கச் சட்டத்தால் நிறுவப்பட்டது. 

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு புனர் நிர்மானிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான்  ஆனுப்பிய கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம்  சிஜடி யினர் நேற்று (07) விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

தோழர் க.பத்மநாபா

ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி முதலாவது காங்கிரஸ் தலைமை உரை.

FIRST CONGRESS OF THE EPRLF

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யின் வரலாற்றில் முதலாவது காங்கிரஸ் (1984 சூன் 28) புதியதோர் திருப்பத்தைக் குறிக்கிறது. சுய விமர்சனம், விமர்சனம் என்னும் ஆயுதத்தால் தவறுகளைக் களைந்து சரியான திசை வழியில் முன்னேறிக்கொண்டிருக்கும் எமது புரட்சிகர ஸ்தாபனத்தின் முன்னோக்கிய வளர்ச்சிப் பாதைக்கு முதலாவது காங்கிரஸ் ஒளிபாய்ச்சியுள்ளது.

அடுத்த ஐஜிபி யார்? ;12 கூடுகிறது அரசியலமைப்பு சபை

அடுத்த பொலிஸ்மா அதிபர் (ஐஜிபி )பதவி குறித்து முடிவெடுப்பதற்காக அரசியலமைப்பு சபை 12 ஆம் தேதி மீண்டும் கூட உள்ளது. ஜனாதிபதி ஏற்கனவே ஐஜிபி பதவிக்கு பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவின் பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

அத்துரலிய தேரரை கைது செய்ய வலை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் வசித்து வருவதாகக் கூறப்படும் ஒபேசேகரபுர சதஹம் சேவன விகாரைக்கு அவரைக் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் சென்றன, ஆனால் துறவி அங்கு இல்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நினைவு அஞ்சலி: விமலாதேவி (அன்ரி)

ஈழமாணவர் பொதுமன்ற(Gues) ஆரம்பகால ங்களில் மானிப்பாய் நகரசபை வளாகத்திற்கு அண்மையாக வசித்துவந்த அங்கிள் என்று எம்மால் அன்பாக அழைக்கப்பட்ட திரு சண்முகநாதன் அவர்களின் மனைவி விமலாதேவி (அன்ரி) 07/08/2025 மரணமான துயர் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்றோம்.

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி விளக்கம்

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது எந்தவித இடையூறும் இல்லாமல் தொடரும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.