இலங்கை குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட IMF

பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கொசெக் தெரிவித்தார். 

மக்கள் பெரும்பாலும் பேச விரும்பாத ஒரு தலைப்பு

ஓரினச்சேர்க்கை என்ற வார்த்தையைக் கேட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள்? இது பெரும்பாலான மக்கள் பேச விரும்பாத ஒரு தலைப்பு, ஆனால் ஒரு சிறிய குழு மக்கள் இதைப் பற்றிப் பேச விரும்புகிறார்கள். இருப்பினும், இதைப் பற்றி வலைப்பதிவு உலகில் நிறைய உள்ளது. 

”எந்தவொரு குற்றவாளியையும் SJB பாதுகாக்காது”

கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டால், எந்தவொரு எதிர்க்கட்சி அரசியல்வாதியையும் பாதுகாக்கவும் ஆதரிக்கவும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தயாராக இல்லை என்று SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷனா ராஜகருணா இன்று தெரிவித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு: பாகிஸ்தானில் 12 பேர் பலி

பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​ மக்கள் 38 முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட்​டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் துப்பாக்கி சூடுநடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 200 இற்கும் மேற்பட்டோர் குண்டுகாயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 பொலிஸார் உயிரிழந்தனர்.  ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா – சீனா இடையே விமான சேவை

இந்தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை ஒக்​டோபர் 26 ஆம் திகதி முதல் தொடங்​கப்​படுகிறது. கொரோனா காலத்​தில் இந்தியா – சீனா இடையே விமான சேவை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது.

பிளாஸ்டிக் போத்தல்கள் பால் போத்தல்கள் குறித்து அதிரடி அறிவிப்பு

2026 ஏப்ரல் 1ஆம் திகதி முதல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால் குடிக்கும் போத்தல்கள் அனைத்தும் இலங்கை தரநிலை (SLS) சான்றிதழைக் கொண்டிருப்பதை நுகர்வோர் விவகார ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.

கட்டுநாயக்க-கொழும்புக்கு இடையில் சீ-பிளேன் சேவை

கட்டுநாயக்க-கொழும்புக்கு இடையில் சீ-பிளேன் சேவை பேர ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம், இலங்கையின் உள்நாட்டு வழிமுறைகளை திட்டவட்டமாக நிராகரித்து, செம்மணி மனித புதைகுழி உட்பட வடக்கு மற்றும் கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளை விசாரிக்க ஒரு சுயாதீனமான, சிறப்பு, சர்வதேச விசாரணை ஆணையத்தை உடனடியாக நிறுவ வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. 

பாடசாலையின் படலையை பூட்டி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றுமாறு  கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி பாடசாலை   வியாழக்கிழமை (02) மாணவர்கள் பாடசாலை  முன் கதவை பூட்டி  ஆசிரியர்கள் எவரையும் உட்செல்ல விடாது பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரிஷாத்தின் மனுவுக்கு திகதி குறிப்பு

நியாயமான காரணங்கள் இன்றி, 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.