யாழ்தேவி தாமதமாகும்

வவுனியா மற்றும் ஓமந்தை இடையே ரயில் பாதையில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை (KKS) இடையே இயக்கப்படும் யாழ்தேவி ரயில் தாமதமாகும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

“SVAT-ஐ இரத்து செய்ய வேண்டாம்”

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரத்தாகும்  எளிமைப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி (SVAT) திட்டம் நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். SVAT வசதியை இரத்துச் செய்யும் நடவடிக்கையைக் கைவிடுமாறும், நமது நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு நன்மை பயக்கும் என்பதால், இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைக்குச் செல்லவேண்டும்.

மஹிந்தவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் சம்பவம்: வதந்தி பரப்பிய 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்கு

கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் குறித்து வதந்தி பரப்​பிய​தாக சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வலைதள கணக்​காளர்​கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்பட்டுள்ளது. பொது அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யில் வலை​தளங்களில் பதி​விடு​வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சென்னை காவல் ஆணை​யர் அருண் எச்சரித்துள்ளார்.

ஐ. அமெரிக்க அரசாங்கம் முடக்கம்

ஐக்கிய அமெரிக்க அரசாங்கமானது பகுதியளவில் முடக்கப்பட்டுள்ளது. செலவுக்கான சட்டமூலமொன்றை நிறைவேற்றும் செனட் உறுப்பினர்களின் இறுதி நேர முயற்சிகள் தோல்வியடைந்தமையையடுத்தே இம்முடக்கம் ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்துக்கான முன்மொழிவுகளை ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் நிராகரித்திருந்தனர்.

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 69 பேர் பலி

மத்திய பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (30)  இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்   குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் ​மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க தூதரகங்களில் கடவுச்சீட்டு,விசா சேவைகள் தொடரும்

ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டாலும், அமெரிக்காவிலும், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் தொடரும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

வருகிறது சிலிசிலி வரி

பொலித்தீன் மற்றும் பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் கட்டணம் வசூலிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு, உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (01) அறிவித்துள்ளது. 

சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது