கிழக்கு கடற்கரைக்கு அருகில் சூறாவளி நிலைகொண்டுள்ளது

தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது இன்று (9) அதிகாலை 4 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  அது மேலும் வலுவடைந்து வடமேற்குத் திசையில் பயணித்து இன்று பிற்பகல் வேளையில் பொத்துவிலுக்கும், திருகோணமலைக்கும் இடையிலான கடற்பரப்பு ஊடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

’யாழ்ப்பாணத்தில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம்’

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இதன் தாக்கம் யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

கிரீன்லாந்து மக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டம்

கிரீன்லாந்து மக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க அந்நாட்டு குடிமக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறார்.

டக்ளஸ் விடுதலை, ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா களுத்துறை நீதி மன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். காணாமல் போன துப்பாக்கி தொடர்பான விசாரணை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கம்பஹா நீதவான் சீலானி பெரேரா ஜாமீன் வழங்கினார். மாஜிஸ்திரேட் அவரை தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்தார்.

பிரதமர் அமரசூரிய மீதான தீய நோக்கம் கொண்ட தாக்குதல்களை நிறுத்துங்கள்

(News.LK – Tamil)

இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து எமது அவதானம் திரும்பியுள்ளது. ஒரு ஜனநாயக சமூகத்தில் நிலவ வேண்டிய நாகரிகம் மற்றும் கண்ணியத்தின் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் இந்தத் தாக்குதல்கள் குறித்து நாம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைகிறோம்.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த டென்மார்க் உத்தரவு!.. கிரீன்லாந்து எல்லையில் பதற்றம்..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் நிலையில், டென்மார்க் அரசு தனது ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.கிரீன்லாந்து மண்ணில் அமெரிக்கப் படைகள் அத்துமீறி நுழைய முயன்றால், எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி உடனடியாகத் தாக்குதல் நடத்த டென்மார்க் வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. – பா.ம.க இணைவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அ.தி.மு.க. கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இ.பி.எஸ். தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பா.ம.கவுடனான கூட்டணி குறித்தும் அ.தி.மு.க. பரிசீலித்து வந்தது.

இரண்டு கப்பல்களைக் கைப்பற்றிய ஐ. அமெரிக்கா

வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதிகளுடன் தொடர்புபட்ட இரண்டு எண்ணெய்க் கப்பல்களை வட அத்லாண்டிக், கரீபியனில் நடவடிக்கைகளில் தாம் கைப்பற்றியதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வெனிசுலாவில் 14 ஊடகவியளாலர்கள் கைது

அமெரிக்க இராணுவ படைகள் வெனிசுலா தலைநகரை தாக்கி, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்ததையடுத்து ஏற்பட்ட நிலைமை குறித்து  செய்தி வெளியிட்ட 14 ஊடகவியலாளர்களை வெனிசுலா அரசாங்கம் கைது செய்துள்ளது.

ரஷ்ய எண்ணெய் கப்பலை பின்தொடரும் அமெரிக்கா

வெனிசுலாவிற்குள் நுழைந்து வெளியேறும் எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது ரஷ்யாவின் கப்பல் ஒன்று அப்பகுதியில் பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.