அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

அக்கரைப்பற்று கல்வி வலய பதுரியா வித்தியாலய அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் வியாழக்கிழமை (08) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூட்டை வெட்டி சிறையிலிருந்து தப்பிய இளைஞன்

ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு, தங்காலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் சிறையறை  கதவின் பூட்டை வெட்டி தப்பிச் சென்ற சம்பவத்தால் , தங்காலை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர், மற்றும்  பொலிஸ் கான்ஸ்டபிள்  ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் திடீர் தீ பரவல்

நவகமுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் கட்டிடத்தின் உட்புறம் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். இதனால் குறித்த கட்டிடத்தில் இருந்த துணி கிடங்கு மற்றும் பல ஆவணங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மாநகர சபை மற்றும் கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு படையினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ பரவலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்காவில் பொது மக்கள் போராட்டம்

37 வயதான ரெனீ குட், அமெரிக்க குடியேற்ற முகவரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, மினியாபோலிஸில் ( united status) போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இலங்கையை நோக்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, அடுத்த சில மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பிரதமர் ஹரிணி வெளியிட்ட கல்வி பற்றிய அறிவிப்பு

தற்போதைய அரசாங்கம் மாணவர்களின் கல்வியைப் பாதுகாப்பதற்கும் கல்வி முறையை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களிடம் கூறினார்.

இலங்கையில் பூமியதிர்ச்சி

கண்டி – உடுதும்புர, தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம்  உறுதிப்படுத்தியுள்ளது.  இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 ஆக உணரப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

1993-ம் ஆண்டு: சோமாலியா இல் அமெரிக்கா

(Abdullah Ibnu Naseer)


வெனிசுவேலாவின் அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்த விதத்தைப் பார்த்துவிட்டு, பலரும் சோமாலியாவில் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடர்பு படுத்தி பேசியிருந்தார்கள். சோமாலிய சம்பவம் கிளின்டன் காலத்தில் நடந்ததது என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

தித்வா புயலின் பின்னரான கடன்: ஏன் இலங்கை அவதானத்துடன் இருக்க வேண்டும்

தித்வா புயல் காரணமாக இலங்கையில் பாரிய மனிதநேய மற்றும் பொருளாதார அதிர்ச்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் மதிப்பின் பிரகாரம் நேரடி சேதங்களின் மதிப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (மொத்த தேசிய உற்பத்தியின் சுமார் 4%). இந்நிலையில் அவசர பொது நடவடிக்கைகள் அத்தியாவசியமானவையாகும். அவசர தங்குமிடங்கள், விவசாய மறுசீரமைப்புகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடும், அந்நியச் செலாவணியும் அவசியமாவதுடன், இலங்கையின் பெரும்பொருளாதார சூழ்நிலை நெருக்கடியாக காணப்படும் சூழலில், இந்த நிலை மேலும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.