போதைப்பொருள் பாவித்த நிலையில் தனியார் பேருந்துகளில் சேவையில் ஈடுபட்டிருந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றது.
வங்கதேசத்தின் குல்னா சாதார் பகுதியில் ஆலியா மதரசா வாக்குச்சாவடியில் இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் வங்கதேச தேசியவாத கட்சியை (பிஎன்பி) சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கல் வியாழக்கிழமை (12) பிற்பகல் மீண்டும் தொடங்கியதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா, புகாரி அந்த மாநகர சபையின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னிலக்கப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) நிர்வாகச் சட்ட மசோதாவை இந்த ஆண்டு (2026) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மலேசியாவின் மின்னிலக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
மெக்சிகோவில் பல்வேறு நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் அமைந்துள்ள குவாடலஜாராவில் (Guadalajara), இதுவரை 1,245 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றுக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கிளிநொச்சி , கண்டவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் அமைந்துள்ள கண்டாளை, பரந்தன் மற்றும் தர்மபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் 02, 03 மற்றும் 05 ம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் உணவு கையாளும் நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.