அமெரிக்கா கண்ணில் விரலை விட்டு ஆட்டிய ரஷ்யா

ரஷ்யா – உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா வழங்கிய எஃப்-16 போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்கா இடையே இதுவரை வார்த்தைப் போர் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், போர் விமானத்தைச் சுட்டி வீழ்த்தியுள்ள இந்த சம்பவம் உக்ரைனுக்கும், அதற்கு ஆதரவளித்து வரும் மேற்கத்திய நாடுகளுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் அதிநவீன எஸ்-300 வான் வழி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி அமெரிக்காவின் இந்த போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் பேச்சுக்கு அழைப்பு: ட்ரம்ப் ஆலோசனை

ஈரானில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவைத் தொடர்பு கொண்டுள்ளனர் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி: ட்ரம்ப்

ஈரானுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ள நாடுகளிலிருந்தான பொருள்களுக்கு 25 சதவீத வரியை தான் விதித்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மேலும் உதவியது

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் மனிதாபிமான உதவிகளுக்காக  இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்  மேலதிகமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை  வழங்கவுள்ளது.   இதன் மூலம் மொத்தமாக 4 மில்லியன் டொலர்  அமெரிக்க உதவியும் கிடைத்துள்ளது.

நிகழ்நிலை மூலம் மேன்முறையீடு செய்யலாம்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில் 2026ம் ஆண்டிற்கான தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான முதலாம் சுற்று மேன்முறையீடுகளை 2026.01.12ம் திகதி முதல் 2026.01.25ம் திகதி வரையில் நிகழ்நிலை முறைமையூடாக (Online) சமர்ப்பிக்க முடியும்.

சம்பா, கீரிசம்பா நெல் விலை அதிகரிப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபை 2025 ஆம் ஆண்டின் சிறுபோகச் செய்கையின் நாட்டரிசி நெல், சம்பா நெல் மற்றும் கீரிசம்பா நெல் முறையே ஒரு கிலோ கிராம் 120  ரூபாய், 125 ரூபாய் மற்றும் 132 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு 15,000 ரூபாய் பண்டிகை முற்பணம்

அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள -தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற பண்டிகைகளுக்கும் யாத்திரிகப் பயணங்களுக்கும் (சிவனொளிபாத மலை தரிசனம் மற்றும் ஹஜ் கடமை போன்ற முற்பணமாக 10,000/- ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை உண்டு.

கிழக்கு வைத்தியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில்…

அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளரை நீக்கக் கோரி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் செவ்வாய்க்கிழமை (13) அன்று வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிசுப்பிசுத்தது விமலின் சத்தியாக்கிரகம்

கல்வி மறுசீரமைப்புக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினர், பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் திங்கட்கிழமை (12) முதல் குதித்தனர்.

அரச வாகனங்களுக்கு டிஜிட்டல் அட்டை

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.