ரஷ்ய கூட்டமைப்பின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), இலங்கைக்கு ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (31) அன்று பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
நாளைக்கு இரண்டு ’QR’
பேரழிவை உண்டாக்கும் போகும் அமெரிக்க ஊடுருவல்
’எமது எதிரிகள் உங்கள் நிலத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்’
பேரழிவை உண்டாக்கும் போகும் அமெரிக்க ஊடுருவல்
எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்கிறது ரஷ்யா
இலங்கை வருகிறது 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான முக்கிய தொலைபேசி கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து, 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு வருகிறது. அதில் டீசல் (20,000 மெட்ரிக் தொன்) பெட்ரோல் (18,000 மெட்ரிக் தொன்) அடங்குகின்றது. அந்த சரக்கை தாங்கிய கப்பல் நாளை(28) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.
’இலங்கையில் உணவு விலை 15 வீதம் உயரும்’
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலக அளவில் உணவுப் பொருள்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இரண்டாவது நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜெர்மனியின் கீல் உலகப் பொருளாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்த நீரிணை முடக்கப்பட்டால் இலங்கையில் உணவுப் பொருள்களின் விலை 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் சிம்பாப்வே 30 வீதம் விலை உயர்வுடன் முதலிடத்தில் உள்ளது.
மட்டு மாவட்ட மாவட்ட ஒருங்கிணப்புக்குழுக்கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட ஒருங்கிணப்புக்குழுக்கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தியமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.
