இதற்காக 8 விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த விலைமனுக்களை மதிப்பிட்ட பின்னர், உயர் மட்ட பெறுகைக் குழு மற்றும் பெறுகை மேன்முறையீட்டுச் சபை ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில், குறைந்தபட்ச விலைமனுதாரரான சம்பந்தப்பட்ட நிர்மாண நிறுவனத்திற்கு 1.070 பில்லியன் ரூபாய் (நிச்சயமற்ற நிதி உள்ளிட்ட மற்றும் பெறுமதி சேர் வரி நீங்கலாக) தொகைக்குக் குறித்த பெறுகையை வழங்குவதற்காகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.