தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ கணக்கிற்கு 2010ஆம் ஆண்டில் 10 மில்லியன் ரூபாய் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ஷவை, எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம திங்கட்கிழமை (06) உத்தரவிட்டுள்ளார்.