திறந்த இதய அறுவை சிகிச்சையில் சிக்கல்: ஷிரந்திக்கு அதிரடி தீர்ப்பு

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி. ஸ்கேனர் (CT scanner) ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, ராஜபக்ஷவினால் கோரப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பான முறைகேடு தொடர்பிலேயே இவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

முந்தைய நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, சிறைச்சாலைகள் அத்தியாட்சகர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளரினால் மூன்று பக்கங்களைக் கொண்ட மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், சமர்ப்பிக்கப்பட்ட மூன்று பக்க மருத்துவ அறிக்கையில், ஷிரந்தி ராஜபக்ஷ திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு (Open-heart surgery) உட்படுத்தப்படுகிறார் என்றோ அல்லது அத்தகைய அறுவை சிகிச்சை அவருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றோ எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை என பிரதம நீதவான் சுட்டிக்காட்டினார்.

சந்தேகநபரின் சுகாதார நிலையை மதிப்பீடு செய்வதற்காக மருத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மருத்துவக் குழுவின் அறிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அன்றைய தினம் சந்தேகநபருக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் நீதவான் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply