காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்:‘எங்களுக்கு தொடர்பில்லை’ – பாகிஸ்தான்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.  இதுதொடர்பாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், “பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லை, எனவே இதற்கு பாகிஸ்தானை குறை கூற வேண்டாம்.

மக்கள் விடுதலை முன்னணியும் இந்திய விஸ்தரிப்பு வாதமும்

ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே கைச்சாத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின், குறிப்பாக பாதுகாப்பு ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இன்னமும் அரசாங்கத்தை வற்புறுத்தி வருகின்றன.

‘இந்தியா காஷ்மிரில் சுற்றுலாப்பயணிகள் மீதான தாக்குதலில் 26 பேர் பலி’

இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மிர் பிராந்தியத்தில் ஆயுததாரிகளெனச் சந்தேகிக்கப்படுவோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.  

வாசிப்பு பழக்கத்தின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்

‘உடலுக்கு உடற்பயிற்சி போலவே வாசிப்பு என்பது நம் மனதிற்கும் அறிவுக்குமான பயிற்சியாகும்’ என்று ரிச்சா்ட் ஸ்டீல் கூறியுள்ளார். எனினும், புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன.

‘தீப்பொறி’

அறுபதுகளில் பரப்பாகிய பத்திரிகை..!

எம். கே. அந்தனிசில் எழுதிய அடுக்கு வசனங்கள்..!!
அறுபதுகளில் அரசியல் – இலக்கியவாதிகள் மத்தியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட பத்திரிகை ‘தீப்பொறி’..!

சம்பளம் முதல் கார் வரை: போப் பிரான்சிஸ் கையாண்டது எப்படி?

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக அளவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது எளிய வாழ்க்கை, மாதச் சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருண்ட நினைவுக்கு ஆறாண்டுகள் கடந்து விட்டன

இலங்கையர்களுக்கு மட்டுமன்றி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 21ஆம் திகதி இருண்ட நாளாகவே அமையும். இன்றைக்கு ஆறு வருடங்களுக்கு முன்னர் 2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் கோரத்தில் இருந்து பலரும் இன்னும் விடுபடவில்லை.  இந்த தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டனர்.

கெஹெலிய வழக்கில் புதிய திருப்பம்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) ஊசிகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான விசாரணைக்கு மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்குமாறு சட்டமா அதிபர் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 123,945 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தியா, பிரித்தானியா  மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்து பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 2025 ஏப்ரல் 20ஆம் திகதி நிலைவரப்படி, சுமார் 846,221 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

’’10 பேர்ச்சஸ் காணியை உடன் வழங்க வேண்டும்’’

“மலையக தமிழ் மக்கள் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்மையாலுமே அக்கறை இருந்தால் 10 பேர்ச்சஸ் காணியை உடன் வழங்க வேண்டும்.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.