பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரை மட்டக்களப்பு காத்தான்குடியில் அவரது வீட்டில் வைத்து இன்று மாலை சிஜடி யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Month: August 2025
தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்: 400 விமானங்கள் ரத்து
கிழக்கு சீனக்கடலை மையமாக கொண்டு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலு கொண்டது. இந்த புயலுக்கு ‘போடூல்’ என தைவான் பெயரிட்ட நிலையில் அந்த தீவின் தென்கிழக்கு கரையோரம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. நேற்று போடூல் புயல் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் கரையை கடந்தது.
இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 123 பேர் பலி
காஸா நகரத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு முன்னர் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 24 மணித்தியாலங்களில் 123 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வாரமொன்றில் கொல்லப்பட்டவர்களின் கூடிய எண்ணிக்கை இதுவாகுமென்பது குறிப்பிடத்தக்கது.
‘ராஜபக்ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சியில் ஜே.வி.பி.யின் ‘மணி’ சத்தம் அதிகமாகி தேசிய மக்கள் சக்தியின் ‘திசைகாட்டி’ தவறாகத் திசை காட்டத் தொடங்கியுள்ளதால் ‘மாற்றம்’ என்ற கோஷம் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பு,நம்பிக்கை பொய்த்துப்போகத் தொடங்கியுள்ளது.இதனை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தவே கடந்த வாரப் பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி ஒரு ஆக்ரோஷமான உரையை நிகழ்த்தி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியிருந்தார்.
குளத்துடன் கோபித்துக்கொண்டு கழுவாவிட்டால் நாறும்
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களில் ஒருவர் கொல்லப்பட்டமை கண்டித்தும் வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தைக் குறைக்குமாறு வலியுறுத்தியும், ஓகஸ்ட் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹர்த்தால், திங்கட்கிழமைக்கு (17) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
