கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் அருகாமையில் வியாழக்கிழமை (07) அன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி பொலிஸாரால் அதிகளவான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமாக தோட்டாக்கள் அதிகளவு சிதறி காணப்பட்டதுடன் அதனை அவதானித்த பாடசாலை சமூகம்உடனடியாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர்.
Month: August 2025
’கருநிலம் பாதுகாப்பு’ போராட்டம்
மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல் களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் புதன்கிழமை (6) அன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது.

”பாரிய கண்டன பேரணிக்கு அணி திரளுங்கள்”
செம்மணி மனித புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை வேண்டும் என நாம் கோரும் அதேவேளை, உள்ளக விசாரணையை திணிக்கும் அரச தலைவரைக் கண்டித்தும் பாரிய கண்டன பேரணியை எதிர்வரும் 30ம் திகதி நடத்த உள்ளோம்.என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் ஜெனிற்றா தெரிவித்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
அமெரிக்காவுடன் இறுதி செய்யவில்லை – ஜனாதிபதி
ஜனாதிபதி அனுர தலைமையிலான அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்
மாகாண சபைகளை மேம்படுத்தும் அரசியல் செயற்திட்டத்தில் இறங்கியிருக்கும் இணைந்த வடக்கு — கிழக்கு மாகாணசபையின் முதலும் கடைசியுமான ஒரேயொரு முதலமைச்சர் ஏ. வரதராஜப் பெருமாள்.
(டி.பி.எஸ். ஜெயராஜ்)
1988 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாணசபைகள் முறை, பல வருடங்களாக வெவ்வேறு மாகாண சபைகளுக்கு மக்களால் தெரிவுசெயயப்பட்ட பல முதலமைச்சர்களை கண்டுவந்திருக்கிறது. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனியொரு முதலமைச்சர் என்பதே நியமமாக இருந்த போதிலும், கடந்த காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கும் இருந்தது.
புலிகள் நிகழ்த்திய காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலை
குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில். காத்தான்குடிப் பள்ளிவாசல்களில் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை மிலேச்சத்தனமாகப் புலிகள் கொன்று குவித்த சம்பவத்தின் 35ஆவது நினைவு தினமும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.