மசாலா மீள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு 4 கம்பனிகளுக்கு அங்கீகாரம்

வடிகட்டுதல், ஒலியொரெசின் மற்றும் ஒதுக்கியவாறான மீள் ஏற்றுமதிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மசாலாப் பொருட்கள் ஏற்றுமதி செய்தல் மற்றும் தயாரித்தலுக்கான நடபடிமுறைகளுக்கு 2023.12.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

12 மாவட்டங்களுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும்: பிரதியமைச்சர் பிரதீப்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா மற்றும்  பெருந்தோட்ட , சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான  விசேட கலந்துரையாடல்   கொழும்பு இந்திய தூதரகத்தில், செவ்வாய்க்கிழமை (05)  இடம்பெற்றது.

யாழில் 23 மில்லியன் மதிப்புள்ள ஈரமான கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி களப்பு அருகே இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நூற்று இரண்டு (102) கிலோ கிராம் மற்றும்  350) கிராம்  ஈரமான எடை ) கேரள கஞ்சா, இருபத்தி மூன்று (23) மில்லியன் ரூபாயை விட அதிகமான தெரு மதிப்புள்ள ஒரு தொகையை கடற்படையனர் திங்கட்கிழமை (04) அன்று கைப்பற்றினர்.

வாக்களிப்பை தவிர்த்த எம்.பி யார் தெரியுமா?

ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை  பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் முற்பகல் 11.30 மணி முதல் மாலை  4 மணிவரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கண்டியை மெய்நிகர் நகரமாக மேம்படுத்த திட்டம்

“க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை சுற்றுலா அபிவிருத்திக்காக பயன்படுத்தி, கண்டியில் ஒரு மெய்நிகர் நகரத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரிக்கும் ’கிங்டம்’க்கு தடை விதிக்கவும் – வைகோ

ஈழத் தமிழர்களை மிக மோசமாக சித்தரிக்கும் கிங்டம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்சே உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் “கிங்டம்” (kingdom). இப்படம் கடந்த ஜூலை 31ஆம் திகதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.

இங்கிலாந்துக்கெதிரான தொடரைச் சமப்படுத்திய இந்தியா

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்தியா சமப்படுத்தியது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-2 என இந்தியா பின்தங்கியிருந்த நிலையில், ஓவலில் வியாழக்கிழமை (31) ஆரம்பித்து திங்கட்கிழமை (04) முடிவுக்கு வந்த ஐந்தாவது போட்டியை இந்தியா வென்றமையைத் தொடர்ந்தே 2-2 என்ற ரீதியில் தொடர் சமநிலையானது.  

எதிர்பார்க்கப்படும் அரசியல் நேர்மை

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதும் மேற்கொண்ட இந்தியாவுக்கான முதல் வெளிநாட்டு விஜயத்தில் ஆராயப்படாத விடயமாக இலங்கைத் தமிழர் பிரச்சினை, மாகாண சபைத் தேர்தல், 13ஆவது திருத்தச் சட்டம் போன்றவைகள் அன்றைய வேளையில் விமர்சிக்க பட்டிருந்தன. ஆனால், அது அலட்டிக் கொள்ளப்படவில்லை.

முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதிய நிறுத்தமும் அஸ்வெசுமவும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியப் பிரச்சினை பல ஆண்டுகளாக  அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இலங்கையில் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்றும் அவர்கள் இலட்சக்கணக்கான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள் என்றும் வலியுறுத்தப்பட்டது.