காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6 ஆயிரத்து 600 ரூபாய் அரச பணத்தை மோசடி செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வாகன சாரதியான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சனிக்கிழமை (16) இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Month: August 2025
ஊடகவியலாளர் குமணனிடம் ஏழு மணித்தியாலம் விசாரணை
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றக்கிழமை (17) அன்று காலை 9.30 மணிக்கு அவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக சென்றார்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு அமைச்சர் விசேட அறிவித்தல்
ஐ நா இப்படிச் சொல்கின்றது
‘உக்ரேனில் போரை நிறுத்துவதற்கான தமது நிலை மாறாது’ – புட்டின்
உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வர கடந்தாண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விதித்த நிபந்தனைகள் மாறவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. முக்கிய உக்ரேனியப் பிராந்தியங்களிலிருந்து உக்ரேனியப் படைகள் முழுமையாக வெளியேறல், நேட்டோவில் உக்ரேன் சேருவதற்கான முன்னெடுப்புக்களை கைவிடுதலே அந்நிபந்தனைகளாகும். உக்ரேனின் 19 சதவீதமான நிலப்பகுதிகளை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. நிபந்தைகளின்படி மேலதிகமாக 21,000 சதுர கிலோ மீற்றர்களை உக்ரேன் தாரை வார்க்க வேண்டும்.
ஈஸ்டர் தாக்குதல்: சிஐடியில் விமல் ஆஜர்
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தான் தெரிவித்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வௌ்ளிக்கிழமை (15) (CID) வந்தார். ஓகஸ்ட் 15 ஆம் திகதி வாக்குமூலம் வழக்குவதற்கு வருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
குழந்தைகளில் 63 சதவீதத்தினருக்கு பல் சொத்தை
ஹர்த்தாலுக்கு ஆதரவு இல்லை – வவுனியா வர்த்தகர் சங்கம்
“இரத்தினக்கல், ஆபரணச் சந்தையை வெற்றிகொள்வோம்”
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் சர்வதேசப் புகழ் பெற்றிருந்த போதிலும், எதிர்பார்த்த அளவிற்கு அதன் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை என்றும், எனவே சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையை வெற்றி கொள்ளும் வகையில் நிலையான கொள்கைகளை வகுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அனுர- மோடியால் பெரும் பதற்றம்
“அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மரண பொறியை எதிர்ப்போம்” என்று எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்க மஹரகம நகரில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை பொலிஸார், வெள்ளிக்கிழமை (15) அகற்றிய போது ஒரு சூடான சூழ்நிலை ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
