மிதிகம ருவானின் நண்பன் கைது

பாதாள உலகக் குழு தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருமான மிதிகம ருவானின் நண்பன் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம மற்றும் மிதிகம பகுதிகளுக்கு இடையில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து மூன்று டி-56 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

அரச சேவைகளை அணுக புதிய டிஜிட்டல் தளம்

ஒரு டிஜிட்டல் தளத்தின் மூலம் மக்களுக்கு அரச சேவைகளை தடையின்றி அணுகுவதை நோக்கமாகக் கொண்ட ‘அரச சூப்பர்செயலி’யை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

5 கோடி ரூபாய் மதிப்புள்ள ”குஷ்” சிக்கியது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலிருந்து ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ”குஷ்” போதைப்பொருளுடன் வெளியேற முயன்ற இரண்டு பயணிகள் செவ்வாய்க்கிமை (23) காலை   ”கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.

போதைப் பொருள் வியாபாரம் ; மூவர் கைது

இளைஞர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் செய்துவந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட குழுவினரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பரந்தனில் முதலீடு செய்ய அங்கிகாரம்

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில் கோஸ்ரிக் சோடாஃகுளோரின் உற்பத்தித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியவளக் கற்கையை வரையறுக்கபட்ட பரந்தன் இரசாயனக் கம்பனியால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்-நாளை சபையில் அங்கீகாரம்

மின்சாரத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இருந்தபோதிலும், இலங்கையில் மின்சார நெருக்கடியையோ அல்லது மின்வெட்டையோ அரசாங்கம் அனுமதிக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். 

புலிகளுக்கு ரூ. 40 கோடியை மாற்ற முயன்றேன்: ED-யிடம் இலங்கை பெண் வாக்குமூலம்

தமிழீ​ழ விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்ய வங்கிப் பணமான ரூ 40 கோடியை மாற்ற முயன்றதாக இலங்கை பெண் ஒருவர் புழல் சிறையில் இருந்தபடியே வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

கலாசாரம், பாரம்பரியத்தை புரிய வைக்க வேண்டும்

சீகிரியாவைப் பார்வையிட சென்ற ஒருவர், சீகிரியா பாறைகளைப் பற்றிய தனது உணர்வுகளை எழுத விரும்பினாலும் அவற்றை எழுத மாட்டார் என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது, அவரது எண்ணங்கள் முன்பே எழுதப்பட்டிருப்பதால், அதைப் பற்றி அவர் எதுவும் எழுத மாட்டார்.

தங்காலையில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் லாரி பறிமுதல்

தங்காலை,கொடெல்ல, கடுருபோகுன வீதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் 200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள், ஒரு டி-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவால்வர்கள் ஆகியவை ​பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தர்பூசணிகளை கொண்டு செல்வது என்ற போர்வையில் லாரியில் ஒரு சிறப்பு பெட்டியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.