டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா குறிப்பிட்டார்.
Month: November 2025
நீண்ட கால பிரதமர் படுதோல்வி
மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலி விபத்து
மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலி லுணுவில கிங் ஓயாவில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
கம்பளையில் பெரும் துயர்
கம்பளை வைத்தியசாலையில் மாத்திரம் தற்போது மரணித்தவர்களின் 48 உடல்கள் காணப்படுகின்றன. 100 க்கும் அதிகமானோர் மரணித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இடுபாடிகளில் சிக்கிய உடல்களை இன்னும் மீட்க முடியாதுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. உறவுகளை இழந்து மக்கள் தவிக்கிறார்கள்.
இதுவரை 968,304 பேர் பாதிப்பு
“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் – பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
இன்று மாலை 6.00 மணி வரையான நிலவரப்படி மோசமான வானிலை காரணமாக இலங்கையில் 334 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 370 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவுக்கப்படுகின்றது.
இலங்கையில் ஆறுகள்
(Siraj Mashoor)
இலங்கையில் 103 ஆறுகள் இருக்கின்றனவாம்.
பிரதான ஆறுகள் அனைத்துமே சமகாலத்தில் நிறைந்து வழிந்து, வெள்ளம் பெருக்கெடுத்தோடிய காட்சிகளை இம்முறைதான் கண்ணால் கண்டோம்.
பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் ஏக காலத்தில் திறக்கப்பட்டன. மஹாவெலி அபிவிருத்தித் திட்டத்தின் பின்னரான அணைக்கட்டுகளின் வான் கதவுகள் இவ்வாறு திறக்கப்பட்டது, மலைநாட்டில் பெரும் சவாலாக மாறியது.


