மட்டக்களப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்ததனால் ஆறுகள் பெருக்கெடுத்து காணப்படுவதனால் ஆற்றை அண்டிய சில பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கு குறுக்கே வெள்ள நீர் பாய்வதனால் பொதுமக்களது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Month: November 2025
தெதுரு ஓயாவின் 06 வான் கதவுகள் திறப்பு
கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு
நீலப்பொருளாதாரத்தக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு
2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ப்ளு எக்கோனமிக் எனப்படுகின்ற நீலப்பொருளாதாரத்துக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பமாகும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் பீ.கே.கோலித்த கமல் ஜினதாச தெரிவித்தார்.
இலங்கையின் நுகேகொடை அரசியல்
(தோழர் ஜேம்ஸ்)
“மொத்தத்தில் நாமலை ராஜபக்ச வை இளவரசனாக்கி தம்மை சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வாய்பு ஏற்பட்டால் மீண்டும் அரசு சொகுசுகளை அனுபவிக்க துடிக்க பல பேர் கூடி வடம் இல்லாத தேரை இழுந்தது போல் அமைந்துவிட்டது இந்தக் கூட்டம்”

ஒரு மாதத்திற்கு முன்பு தேசிய மக்கள் சக்தி(NPP) அரசுக்கு எதிரான கூட்டம் என்றாக பெயரிட்டு கருக் கொண்டது இன்றைய நுகேகொடை கூட்டம். இதனை ஆரம்பித்தது சிறீலங்கா பொது சன பெரமுன(SLPP) என்ற மொட்டு கட்சி.
MASக்கு ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள்
இன்று 100 மில்லி மீற்றர் மழை பெய்யும்
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சபரகமுவ மற்றும், தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். அத்துடன், நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதில் பிரதம நீதியரசர் நியமனம்
உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இன்று முதல் 27ஆம் திகதி வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
