மத்திய கிழக்கில் மறைந்திருக்கும் இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழுபேர் அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளனர் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ எனும் வேலைத்திட்டம், கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Month: November 2025
சட்ட விரோதமாக தமிழகம் சென்ற யாழ் நபர் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் படகில் புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் இராமேஸ்வரம் சென்று இறங்கிய இலங்கை சேர்ந்த நபர் ஒருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 15ம் தேதி
மக்களுக்கு சலுகைகள் இல்லாத வரவு செலவுத் திட்டம் : சஜித்
யாழ்ப்பாணம், ஹட்டன், இரத்தினபுரி அபிவிருத்திக்கு ஒதுக்கீடு
3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் மூவர் கைது
காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகள்
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை வழங்குதல்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக எந்தவொரு வீடும் அற்ற குடும்பங்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 3,850 மில்லியன் ஒதுக்கீடு, ரூபா 5,000 மில்லியனாக அதிகரிக்கப்படும்.
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு : யாழில் மூவர் அதிரடியாக கைது
மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் பறிமுதல்
கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பேருந்து, கார் மற்றும் ஒரு கெப் ரக வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால், சம்பத் மனம்பேரியின் மித்தெனிய பகுதியில் உள்ள வீடு சோதனை செய்யப்பட்ட போதே, குறிப்பிட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரவு செலவுத் திட்டம் 2026: 2,000 வீடுகளை கட்ட ரூ. 4,290 மில்லியன் ஒதுக்கீடு
மத்திய, ஊவா, சபரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மலையகம் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2,000 வீடுகளைக் கட்டுவதற்காக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ரூ. 4,290 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
