நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Month: July 2026
உச்சம் தொடும் டெங்கு ஆபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு
குவியும் நெத்திலி மீன்கள்: மகிழ்ச்சியில் மீனவர்கள்
வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் அதிகளவான நெத்திலி மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளன. கடும் காற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இந்த நேரத்தில், தமக்குக் கிடைத்த இந்தப் பெருமளவு நெத்திலி மீன்களால் தாங்கள் அதிக அளவில் மகிழ்ச்சி அடைவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
‘கொடூரக்’ கொலை: குழு தப்பிச் சென்றதால்’ கடும் சீற்றம்.
பிரான்ஸ் கடற்கரையில் நடைபெற்ற மோதலில் நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அக்கொலையில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் குழுவினர் சிறிய படகு மூலம் இங்கிலாந்துக்குத் தப்பியோடியுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘திருமலையிலிருந்து இலங்கைக்கு வீரர்களை உருவாக்க வேண்டும்’
பிறப்பு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தாத உலகக் கிண்ண வீரர்கள்
எடைக்கொத்த தக்காளி பரிசு: சம்பியன்களுக்கு விசித்திர மரியாதை
நீட் தேர்வு
(Senthil Kumar)
கட்டாயம் ஆன போது அதை ஆதரித்து பதிவுகள் எழுதியவர்களில் நானும் ஒருவன்.
நீட் தேர்வு சாதகங்கள்-
அகில இந்திய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு இரண்டிற்கும் சேர்த்து ஒரே தேர்வு. எனவே நீட் சிறந்தது!
நாமக்கல் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகள் 11 ம் வகுப்பை நடத்தாமல் 12 ஆம் வகுப்புகளை நடத்தி அதன் மூலம் ரிசல்ட் தந்தனர். அதனால் லட்சக்கணக்கில் அங்கு பணம் கட்டி மாணவர்களை சேர்த்தனர்.
பண வாய்ப்பு இல்லாதவர்கள் போட்டி போட இயலா சூழல். எனவே நீட் சிறந்தது!
ரிபீட் எழுதலாம். அது தான் கேரியர் என்பவர்கள் தொடர்ந்து எழுதலாம். ஆகவே நீட் சிறந்தது!
தனியார் கல்லூரிகள் டொனேசன் வாங்கினர். இனி முடியாது- நீட் சிறந்தது!

விசேட தேவையுடையோரின் பயணம்
விசேட தேவையுடையோரின் பயண சிரமங்களுக்கு தீர்வாக வடக்கில் விரைவில் மெட்றோ பஸ் சேவை – சத்தியலிங்கம் எம்பியின் கேள்விக்கு அமைச்சர் பிமல் பதில்….மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து பெருமளவான நோயாளிகள், குறிப்பாக சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய பிரதமர் மோடியும் கீச்சான் தெளிப்பானும்
இந்திய பிரதமர் மோடி தனது கையில் பூச்சிக்கொல்லித் தெளிப்பானைப் பிடித்துக்கொண்டு, முகத்தில் தீவிரமான/கோபமான உணர்ச்சியுடன் அதைப் பயன்படுத்தத் தயாராக இருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் போராட்டங்களையும் எதிர்ப்புக் குரல்களையும் ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்வதற்குப் பதிலாக, அடக்குமுறை அல்லது தீவிர நடவடிக்கைகளின் மூலம் ஒடுக்க அரசு முயல்வதைக் கேலிச்சித்திரமாக வெளிப்படுத்துகிறது


