(தோழர் ஜேம்ஸ்)

மாற்றம் என்ற பெயரில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு கிடைத்த தோல்வியின் இன்னொரு அங்கமாக எனக்குள் உணர்வை ஏற்படுத்திய தமிழ் நாட்டுத் தேர்தல் முடிவுகள்.
The Formula
Articles
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமல்ல; அது அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் கட்டமைப்பில் ஏற்படப்போகும் ஒரு பெரும் பரிணாம வளர்ச்சியின் அடையாளமாகும். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளின் நிழலில் வளர்ந்த தமிழகம், இன்று ஒரு புதிய தலைமுறை அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
(Shanmuganathan Puvi)
சம்பவம் நடந்தே தீரும்….
கடந்த இரண்டு நாட்களாக TVK தலைவர் விஜயின் உடல் மொழியை பல கோணங்களில் இருந்து ஆராய்ந்து வந்தோம். அவரின் உடல் மொழி எமக்கு 1996 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயின் உடல் மொழியையும் , 2013 ஆம் ஆண்டு அப்போதைய டெல்லி முதல்வர் ஜெஸ்ரிவாலில் உடல் மொழியையும் ஞாபகப்படுத்தியது.
பாஜக இந்தியாவைக் கைப்பற்றவில்லை. பிராந்தியக் கட்சிகள்தான் அதை அவர்களிடம் ஒப்படைத்தன.
2021-ல் “காங்கிரஸ் பொருத்தமற்றது” என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியது; பாஜக இப்போது வங்காளத்தில் வெற்றி பெற்று விட்டது.
உத்தரப் பிரதேசத்தில் “காங்கிரஸ் ஒரு சுமை” என்று சமாஜ்வாடி கூறியது; பாஜக தொடர்ந்து இரண்டு முறை உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

(Olivannan Gopalakrishnan)
இப்படிப்பட்ட தேர்தல் முடிவு வரும் எனக் கடந்த சில நாட்களாகவே மனதிற்குள் உணர்வலைகள் எழுந்தன. நேற்று கூட சில நண்பர்களிடம் எனது அய்யத்தை எழுப்பிய போது அவர்கள் சிரித்துக் கொண்டே உங்களுக்கே அப்படி வரலாமா, வெற்றி நமதே என்றார்கள். இருந்த போதும் கூட மனதுக்குள் ஏதோ ஒன்று நடக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தது.
(அ. வரதராஜா பெருமாள்)( முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

சில வாரங்களுக்கு முன்னர் தமிழர்கள் மத்தியிலுள்ள பிரபலமான கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழ் சட்டத்தரணிகள் சங்க பிரமுகர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியற் தீரவு காண்பதற்கான விடயங்களில் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தினரின் ஆர்வமுடன் செயற்படப் போகிறார்கள் என்றதொரு செய்தி வெளிவந்ததும் தமிழர்களிடையேயுள்ள அரசியற் செயற்பாட்டார்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
Eksath Newspaper
( முரளிமுன்னாள் புலி உறுப்பினர்))
ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.”

(பஷீர்)
(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

பத்பநாபாவும் அவர் தோழர்களும் இறந்த நாளை எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. 1990 ஜூன் மாதம் 16 ஆம் நாள் இரவு ஒன்பது மணிக்கு அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடைய கோபாலபுரத்து வாசஸ்தலத்துக்குள் அவரைச் சந்திப்பதற்காக நானும் தோழர் பாலகுமாரனும் நுழைந்தோம்.