எச்சரிக்கையை மீறும் சுற்றுலா பயணிகள்

வெளிநாடு மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு வருகின்றனர்  இவ் கடற்கரையானது பாதுகாப்பு இன்றி காணப்படுவதால் கடல் பரப்புக்குள் இறங்க வேண்டாம் என வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகள் அறிவித்துள்ளது.

தையிட்டி வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை எதிராக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (05) அன்று  எடுத்துக் கொள்ளப்பட்டபோதே வழக்கு பெப்ரவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. .

நீதிமன்றத்தில் ஜோன்ஸ்டன் ஆஜர்

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) திங்கட்கிழமை (05) அன்று ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார்.

330 முன்னாள் எம்.பிக்கள் 182 துணைவிகளின் ஓய்வூதியம் இரத்து

பாராளுமன்ற ஓய்வூதிய (ரத்து செய்தல்) சட்டமூலம் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவிகளின் நீண்டகால ஓய்வூதிய உரிமைகளை ரத்து செய்வதற்கு வழி வகுக்கும்.

கியூபாவுக்கு எச்சரிக்கை..?

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை கைது செய்த பிறகு முக்கியமான செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,  கியூபாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

வீட்டிற்குள் புகுந்த நபர், மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்

தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் யாளினி ராஜேந்திரனின் கிரகரி வீதியில் உள்ள வீட்டிற்கு சனிக்கிழமை (03) பிற்பகல் 2.30 மணியளவில் வந்த ஒருவர், யாளினி ராஜேந்திரன் உள்ளிட்ட மூவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்கி   காயப்படுத்தியுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபான சாலைகள் வேண்டாம் :மக்கள் ஆர்ப்பாட்டம்

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட வெஞ்சர் பகுதியில் கடந்த காலத்தில் பியர் மட்டும் விற்பனை செய்து வந்த விற்பனை சாலைக்கு மேலும் மதுபானம் மற்றும் கள்ளு போன்ற குடி வகைகள் விற்பனை செய்ய கலால் திணைக்களம் அங்கீகாரம் வழங்க முயற்சி செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.

115 வாட்டர் ஜெல்லுடன் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் சிறப்பு அதிரடி படையுடன் இணைந்து, இலங்கை கடற்படை, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன்,   சட்டவிரோதமாக மீன்பிடிக்க பயன்படுத்தப்படும், வாட்டர் ஜெல் எனப்படும் நூற்று பதினைந்து வணிக வெடிபொருட்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

’’போடி’’ என்ற பெண் ஐஸூடன் சிக்கினார்

கொழும்புப் பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “போடி” என்ற பெண், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரிடமிருந்து 820 கிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் போக்குவரத்து முகாமையாளருக்கு விளக்கமறியல்

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலால எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (04)  உத்தரவிட்டுள்ளது.