முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது முன்னாள் அரசியல் போட்டியாளரான மஹிந்த ராஜபக்ஷவை இன்று தங்காலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். கடந்த மாதம் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது ராஜபக்ச அளித்த ஆதரவுக்கு விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தின்படி, ராஜபக்ச தனிப்பட்ட பயணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, விக்கிரமசிங்க அவரைச் சந்தித்தார்.
Month: September 2025
உண்ணாவிரதப் போராட்டத்தின் நான்காவது நாள் இன்று
மன்னாரில் பொது முடக்கத்திற்கு அழைப்பு
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் திங்கட்கிழமை (29) அன்று மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கம் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோக தண்டிப்பு சட்டமூலம் -பிரதமர் விளக்கம்
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தண்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டம் பாடசாலைகளையோ அல்லது ஆசிரியர்களையோ இலக்காகக் கொண்டதல்ல, மாறாக சமூகம் முழுவதும் குழந்தைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஆடை வாங்க பணம் தராததால் உயிரை மாய்த்த சிறுமி
ஐ.நாவில் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு
அனைத்து வரி செலுத்துவோருக்கும் முக்கிய அறிவிப்பு
2025 செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன் வரிகளை செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு தனிநபர்கள், நிறுவனங்கள், நிறுவன கூட்டாண்மைகள் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.