மலையக குழந்தைகள் பற்றி – அனுர

“நான் விஷேடமாக சொல்ல வருவது தோட்டங்களில் லயம் அறைகளில் வசிக்கும் எங்கள் இளைஞர், யுவதிகளை பற்றி…
அவர்கள் இந்த நாட்டில் பிறந்து, தேயிலை தோட்டங்களில் கஷ்டப்பட்டு, இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்து, இந்த நாட்டிலேயே மரணித்து இந்த மண்ணுக்கே உரமாகிறார்கள் என்றால், அவர்கள் எங்களுடைய மக்கள் கிடையாதா? அவர்கள் எங்களுடையவர்கள் கிடையாதா?

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 80வது அமர்வில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரை

தலைவர் மேடம், திரு. பொதுச் செயலாளர், மரியாதைக்குரிய அழைப்பாளர்கள் மற்றும் சிறப்புமிக்க பிரதிநிதிகளே,

அழகான ஜெர்மனி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேடம் அன்னலெனா பேர்பாக், உலக நாடுகளிடையே நீதியான மற்றும் நீடித்த அமைதியைக் கொண்டுவரும் உன்னத நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் 80வது அமர்வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்து எனது உரையைத் தொடங்க அனுமதிக்கவும்.

கண்டுகொள்ளப்படாத முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள்

(மொஹமட் பாதுஷா)

உலக வரலாற்றில் இதுவரைக்கும் நடைபெற்ற யுத்தங்களில் பெரும்பாலானவை நிலத்தை ஆக்கிரமிப்பதற்கான அல்லது நில மீட்புக்கான யுத்தங்களாகும். காணிகள் மீதான உரிமை எந்தளவுக்கு முக்கியமானது என்பதை இலங்கையின் அனுபவத்தின் ஊடாகவும் புரிந்து கொள்ள முடியும்.

செல்வந்தர்களின் பாட்டாளி வர்க்க அரசியல் புதியதல்ல

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

தேசிய மக்கள் சக்தியினதும் அதன் பிரதான உறுப்புக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவர்களின் சொத்து விவரங்கள் இந்நாட்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

அரசாங்கத்தின் இரண்டாவது பட்ஜெட்

(முருகானந்தம் தவம்)

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசின் இரண்டாவது வரவு- செலவுத்திட்டமான 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில்  26 ஆம் திகதி  சமர்ப்பிக்கப்படவுள்ளது.

போதை ஆபத்துகளிலிருந்து பிள்ளைகளை விடுவிப்போம்

நமது நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கணக்கெடுப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது பல சுகாதார மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது, மேலும் சில போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பாடசாலை மாணவர்களை குறிவைத்து.

மது போதையில் வாகனம் செலுத்திய சாரதி

மது போதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் நுவரெலியா கந்தப்பளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெனிசுலாவில் பாரிய நிலநடுக்கம்

உலக அளவில் மிக பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடான வெனிசுலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600 கி.மீ. மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

’’நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க முடியாது’’

துணை பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிலையியற் கட்டளைகள், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச பாராளுமன்ற நடைமுறைகளின்படி விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று மீண்டும் வலியுறுத்தினார்.  ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கில் நம்பிக்கையில்லா பிரேரணை எந்த சட்ட விளைவையும் ஏற்படுத்தாது என்று கூறி செயலாளர்கள் குழு சமரப்பித்த அறிக்கையையும் மற்றும் சட்டமா அதிபர் தன்னிடம் சமர்ப்பித்த அறிக்கையையும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

ஐ. நா பிரதிநிதியை தமிழ் பிரதிநிதிகள் சந்தித்தனர்

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி  மார்க்அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்களை கையளிக்களிக்கும் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (24) அன்று கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் நடைபெற்றது.