இணையவழி நிதி மோசடி : சீனா ,வியட்நாம் பிரஜைகள் கைது

இணையத்தளம் ஊடாக பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த சீன மற்றும் வியட்நாம் பிரஜைகள் குழுவொன்று, காலி – போத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து செவ்வாய்க்கிழமை (24) மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் வரை கடும் வெப்பநிலை நீடிக்கும்

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை கடுமையான வெப்பநிலையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குவைட் சர்வதேச விமான நிலையம் பற்றி எரிகிறது

குவைட் சர்வதேச விமான நிலையம் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இன்று அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குவைட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தெரிவித்தார். குவைட் சர்வதேச விமான நிலயைத்தில் பரவியுள்ள தீ இதுவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை எனவும் அவர் எமக்கு தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி கடந்த 23 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு அமுலாகும் வகையில் யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் சோதனைச் சாவடி: ஐ.நா. பிரதிநிதியிடம் முறையீடு

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்கும், மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) பணிப்பாளரும் சிவில் சமூகச் செயற்பாட்டாளருமான ஜாட்சன் பிகிராடோவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று திங்கட்கிழமை (23) மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

கிராண்ட்பாஸில் 6 ஆண்டுகளாகப் புதைந்திருந்த இரகசியம் அம்பலம்

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தம்பதியரின் உடல்கள் வெல்லம்பிட்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை  (24) அன்று  கண்டெடுக்கப்பட்டன.

தந்தை மகன் கொலை: பொலிஸார் 9 பேரும் குற்றவாளிகள்

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்திய சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கில் இன்று திங்கட்கிழமை (23) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கைது செய்யப்பட்ட பொலிஸார் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

தென் லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவுள்ளது

லிடனி ஆறு வரையிலான தென் லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவுள்ளது. இப்பகுதியை பாதுகாப்பு வலயமென இஸ்ரேலிய பாதுகாப்பமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் செவ்வாய்க்கிழமை (24) வர்ணித்துள்ளார். லெபனானின் நிலப்பரப்பின் பத்திலொன்று பகுதி இப்பகுதி ஆகும். லிடனி ஆற்றின் மீதான ஐந்து பாலங்களை இஸ்ரேல் அழித்துள்ளதுடன், எல்லைக் கிராமங்களிலுள்ள வீடுகளையும் அழித்துள்ளது. 2000ஆம் ஆண்டு வரையில் தென் லெபனானை இஸ்ரேல் கட்டுப்படுத்தியிருந்தது.

கடனுக்கு அரிசி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச பகுதிக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணியை இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக 1200 க்கு ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை ரீண்ட கால குத்தகைக்கு வழங்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கிழக்கு மாகாண நில மீட்புக்கான வலையமைப்பின் செயற்பாட்டாளர் சஹீலா சபருள்ளா தெரிவித்துள்ளார்.

“ரயில் கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம்”

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில், ரயில் கட்டணங்களை மீண்டும் திருத்தம் செய்ய வேண்டாம் என இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மளமளவென உயர்ந்த மணல் விலை

நாட்டில் அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுமானப் பொருட்களின் விலைகளும் பாரியளவில் உயர்ந்துள்ளன. இதனால் நாட்டின் கட்டுமானத் துறை கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.