“இவர்கள் செய்வது ஒரு பழிவாங்கல் நடவடிக்கைதான். இது அவர்கள் வழமையாகச் செய்யும் ஒன்றுதான்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்க்கட்சி அரசியல் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Month: July 2026
நான் பொறுப்பேற்கிறேன்: நீதி அமைச்சர் ஹர்ஷன
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் சம்பவம் தொடர்பில் தான் ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சராக, இந்தச் சம்பவத்திற்குத் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
இந்தியா செல்வோரின் கவனத்துக்கு
கொழும்பில் இயங்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டியில் இயங்கும் இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் , யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களுக்கான விசா, ஓ.சி.ஐ (OCI), கடவுச்சீட்டு (Passport) மற்றும் சான்றிதழ் உறுதிப்படுத்தல் (Attestation) சேவைகளை வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ ‘வெளிக்கள சேவை வழங்குநராக’ (Outsourcing Service Provider – OSP) ‘அல்ஹிந்த் குளோபல் சேவைகள்’ (Alhind Global Services) நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறைக்கு எதிராக புதிய சட்டத்தைக் கோரி போராட்டம்
பிரான்சில் 11 வயது சிறுமி லியானா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான “விரிவான சட்டக் கட்டமைப்பை” உருவாக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சட்டம் தடுப்பு நடவடிக்கைகள், நீதித்துறை விசாரணை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.