(தோழர் ஜேம்ஸ்)
முதலை நீரில் பலம்.
யானை தரையில் பலம்
குரங்கு மரக்கிளையில் பலம்
பறவை வானத்தில் பலம்

The Formula
Poems
யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கான குடிநீர் விநியோகப் பிரச்சினைக்கான தீர்வாக “A River for Jaffna” என்ற திட்டத்தை மீளத் திறப்பது என்பது முற்றிலும் தவறான கருத்தாகும். இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் குடிநீர் வழங்கல் அல்ல; மாறாக, தீபகற்பத்தின் நில உற்பத்தித் திறனை உயர்த்துவதே ஆகும்.1940களில் புகழ்பெற்ற பொறியாளர் இ. சு. ஆறுமுகம் அவர்கள் இந்தத் திட்டத்தை முன்வைத்தார்.

மேல் கொத்மலே நீர்த்தேக்கம் கொத்மலே ஓயாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 0.8MCM (மில்லியன் கன மீட்டர்). ஒரு சிறிய நீர்த்தேக்கம் கட்டப்பட்டு இந்த நீர்த்தேக்கத்திலிருந்து மேல் கொத்மலே மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீரை எடுத்துச் சென்று 150 MW (மெகாவாட்) உற்பத்தி செய்யப்படுகின்றது.

நிவேதிதா தேவி காசியில் சந்தித்த பாரதியாரின் குரு அங்குதான் இந்தி சமஸ்கிரதம் ஆங்கிலம் எல்லாம் கற்றார்.
காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலம் திலகர் போன்றவர்கள் சுதேச காங்கிரசின் தலைவராக செயற்பட்ட காலம். மிதவாத காங்கிரஸ்காரர்களுக்கும் தேசியவாத காங்கிரஸ் காரர்களுக்கும் இடையிலான போராட்டம் நிலவி காலம்

(தோழர் ஜேம்ஸ்)

துப்பாக்கி எடுக்கவில்லை
துடுப்புடன் போனாய்
வெ(கொ)ல்லப் போகவில்லை
மீட்டிடப் போனாய்
தரையில் போகவில்லை
கரைசேர்க்க போனாய்
வெஞ்சினத்துடன் போவில்லை
வெள்ளத்திற்குள் போனாய்
மகனே எங்கே புதைந்தாய்…?
சமுத்திரம்தான் விழுங்கியதோ….?
துப்பாக்கியுடன் போய் இருந்தால்….?
மரணப் பெட்டியிற்குள் வருவாய் என்று
மனதை ஆற்றுப்படுத்தி இருப்பேன்
நீ துடுப்புடன்தான் போனாய்
துப்பாக்கியை தூர எறிந்துவிட்டு
காப்பாற்றி கரையேற்றி
கடமை முடிய வருவாய்…
காத்திருந்தேன்
பாற் சோறு உனக்கு ஊட்ட
நீ கரையேறாது…?
மக்களை கரையேற்றி
நீரில் கரைந்தது ஏனோ..?
சேற்றில் புதைந்தது தானோ…?
கரைக்கப்பட்டவன் நீ
துரத்தப்பட்டவன் அல்ல
விதைக்கப்படவன் நீ
புதைக்கப்பட்டவன் அல்ல.
உன் அருகில்
தமிழ் சகோதரனும்
புதைக்கப்பட்டிருப்பான்…?
அவன் கரம் கொடுப்பான்
உனக்கு
அதனால்
எனக்கு மட்டும் அல்ல
எங்களுக்கு மட்டும் அல்ல
எல்லோருக்கும்
குல சாமி ஆகிவிட்டாய்
இங்கு புத்தனும்… முருகனும்….
அல்லாவும்… யேசுவும்….
உன்னை விஞ்சும்
சாமி ஆகிவிடுவார்களோ…?
நீதான் ஈழத்து குல சாமியாடா!
மழை புயல் அனர்த்தங்களில் தம்முயிரை அர்பணித்த வீரர்களுக்கு சமர்பணம்.
(மீட்புப் பணியில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள் சிலர் மரணம் – செய்தி)
(Sri Lanka’s navy has confirmed that all five personnel who went missing during a flood-mitigation operation in Chundikkulam have died, as search teams recovered their bodies. Police said the sailors had been working earlier today to widen a waterway in the Chundikkulam area when they were swept away. – News)
அதற்கு தாயின் புலம்பலாக என் மனதில் உதித்த வரிகள் இவை)