கண்டி – உடுதும்புர, தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 ஆக உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
1993-ம் ஆண்டு: சோமாலியா இல் அமெரிக்கா
தித்வா புயலின் பின்னரான கடன்: ஏன் இலங்கை அவதானத்துடன் இருக்க வேண்டும்
தித்வா புயல் காரணமாக இலங்கையில் பாரிய மனிதநேய மற்றும் பொருளாதார அதிர்ச்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் மதிப்பின் பிரகாரம் நேரடி சேதங்களின் மதிப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (மொத்த தேசிய உற்பத்தியின் சுமார் 4%). இந்நிலையில் அவசர பொது நடவடிக்கைகள் அத்தியாவசியமானவையாகும். அவசர தங்குமிடங்கள், விவசாய மறுசீரமைப்புகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடும், அந்நியச் செலாவணியும் அவசியமாவதுடன், இலங்கையின் பெரும்பொருளாதார சூழ்நிலை நெருக்கடியாக காணப்படும் சூழலில், இந்த நிலை மேலும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

டிரம்ப் ஒரு கோழை: தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் – கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ
வெனிசுலாவுக்குள் புகுந்து அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்திருந்தது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், டிரம்ப் ஒரு கோழை என்றும், தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் என்றும் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கூறியிருக்கிறார்.

குஸ்டாவோ, இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. போதை பொருள் விஷயத்தில் வெனிசுலாவை மட்டுமல்ல கொலம்பியாவையும் டிரம்ப் கடுமையாக சாடியிருக்கிறார்.
வேலையை காட்டிய ட்ரம்ப் : வெனிசுலாவுக்கு அதிரடி உத்தரவு
லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா மீது, அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இந்த சம்பவத்தில் வெனிசுலாவின் ராணுவ வீரர்கள் 23 பேரும், க்யூபாவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த 32 பேரும் கொல்லப்பட்டனர். அதோடு, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும் கைது செய்யப்பட்டார்.
’’வெனிசுலாவை விட்டுவிடுங்கள்’’
மீண்டும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை
போதைப்பொருளுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது
சபையில் கஜேந்திரகுமாருக்கு அருகில் அமர முடியாது: அர்ச்சுனா
செவ்வந்தியுடன் கைதான யாழ். தக்ஷிக்கு விளக்கமறியல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கித்தாரியான பிரதான சந்தேக நபருக்கு துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஷார செவ்வந்திக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேக நபரை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



