தீப்பற்றியைத் தொடர்ந்து ஈரானுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக களமிறக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் விமானந் தாங்கிக் கப்பலான ஜெரால்ட் ஆர். போர்ட்டானது தற்காலிகமாக துறைமுகத்துக்குச் செல்லுமென ஐ. அமெரிக்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்துள்ளனர்.

The Formula
இலங்கையில் 1980 நடுப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த ஜேர்.ஆர் ஜெயவர்தன தனது தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை இஸ்ரேல் பிரதிநிதிகளிடம் கோரியதாக இராஜந்திர கேபிளொன்று வெளிப்படுத்தியதாக தவையர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்நிதி அளிக்கப்பட்டதா என இஸ்ரேலிய வெளிநாட்டமைச்சு அண்மையில் வெளிப்படுத்திய இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தவில்லை.
புதன்கிழமைகளை அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளதால், நாளை (18) பாராளுமன்றத்தை கூட்டப்போவதில்லை என பாராளுமன்ற தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற நாட்காட்டியின்படி புதன்கிழமை (18) பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் பொது சேவைகளுக்காக ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை தினமாக இருக்கும் என அரசாங்கம் திங்கட்கிழமை (16) அறிவித்தது.
ஈரானின் பதிலடி தாக்குதல் தனக்கு ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த நிலையில், ஈரானை தாக்குவது அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகளுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்களைத் தூண்டிவிடும் என அவருக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்காக விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.