ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புட்டின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

உக்குவளை அல்மினா ஆரம்ப பாடசாலையின் சிறுவர் பூங்கா   இப்பாடசாலையின் அதிபர் திருமதி எப். நிரோசியாவால் இப்பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது

விடுமுறைக்கு யாழ். வந்தவர் இளைஞன் மீது தாக்குதல்

ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்த ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் பணியாளர்களுக்கான வேலை நேரத்தில் திருத்தம்

1954 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் தற்போதுள்ள விதிமுறைகளைத் திருத்துவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது, இது விருந்தோம்பல் துறையில் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட வேலை நேரத்தை விரிவுபடுத்துகிறது.

15 மில்லியன் டொலர் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வு கூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க  STEMedical மற்றும்  இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) என்பவற்றுக்கு இடையே   ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (15) கையெழுத்தானது.

இஸ்ரேலுக்கு எதிராக போராடிய இளம் போராட்டக்காரர் விடுதலை

சமூக ஊடகங்கள் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞன் இன்று கல்கிசை மேலதிக நீதவான் ஹேமாலி ஹல்பத்தெனியவால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வட்டிக்கு வாங்கியவரை நிர்வாணமாக்கிய கந்துவட்டி கும்பல் கைது

கந்து வட்டிக்கு பணம் வாங்கிய நபர், பணத்தை  மீள கொடுக்க தவறியமையால் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர், மேலும் மூவருடன் இணைந்து , பணம் பெற்றவரை இளவாலை பகுதிக்கு கடத்தி சென்று , நிர்வாணமாக்கி , அவரை மோசமாக தாக்கி ,சித்திரவதைகள் புரிந்து அதை தனது திறன்பேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர். 

ஒரு பில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள தங்கத்துடன் இளைஞன் கைது

டுபாயில் இருந்து நாட்டிற்குள் 35 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதற்காக 32 வயதுடைய இலங்கை பயணி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டால் பிணை கோரி ராஜித மனு தாக்கல்

கிரிந்த மீன்வளத் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 20 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் தேடப்பட்டு வரும் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன,  கொழும்பு பிரதான  நீதவான் முன்னிலையில் முன் பிணை மனுவை, திங்கட்கிழமை (14)  தாக்கல் செய்ய உள்ளார்.

“பொதி செய்யப்படாத எண்ணெய் விற்பனை நிறுத்தப்படும்”

சந்தையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையை நிறுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தேங்காய் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சாந்த ரணவக்க  தெரிவித்தார்.