பிறப்புச் சான்றிதழ்கள் தபால் மூலம் வழங்கப்படும்

இலங்கை தபால்  சேவை மூலம் குடிமக்களுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை இலங்கை புதன்கிழமை (12) அன்று ஆரம்பித்துள்ளதாக பதிவாளர் நாயகம் துறை அறிவித்துள்ளது.

கிழக்கில் விழிப்புணர்வு வீதிநாடகம்

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களினால் சமத்துவமும் உரிமைகளும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி என்ற தொனிப்பொருளில் வீதி நாடகம் ஒன்று, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (11) காலை நிகழ்த்தப்பட்டது.

வடமாகாண தாதியர்கள் நாளை வேலைநிறுத்தம்

வடக்கு மாகாணத்தில் புதன்கிழமை (12) காலை முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.

யாழில் உள்ளக விளையாட்டரங்கு

யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்   சமர்ப்பித்துள்ள யோசனைக்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக் தலைமையில், கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அணிவகுப்பில் சிக்கிய போலி சட்டத்தரணி

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் சில சட்டத்தரணிகளையும் ஏமாற்றிய நடமாடி வந்துள்ள போலி சட்டத்தரணி ஒருவரை  சனிக்கிழமை (08) ஒந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“வீதியில் நிற்பவர்களை சந்திக்க தயாரில்லை” – யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா

முறையான முன்னறிவிப்பு இன்றி தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என சுட்டிக்காட்டிய முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, சதிகளின் பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால் தன்னை எழுத்து மூலம் ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரீசீலிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

2024/2025 கல்வி ஆண்டில் நாடு முழுவதும் இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவர்களின் விபரம்:

(குறிப்பு: 40% திறமை அடிப்படையிலும் 55% மாவட்ட கோட்டா முறையில் தெரிவு செய்யும் முறைமை இருந்தாலும் இம்முறை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்ட 2095 இடங்களில் Island Rank 2095 இற்குள்ளே வந்த 1864 மாணவர்கள் மருத்துவ கல்வியை தொடரும் வாய்ப்பை பெற்றுள்ளனர். 209 மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவர்களே Island Rank 2095 இற்கு அப்பால் உள்ள நிலைகளைப் பெற்றவர்களாக உள்ளனர். இது மொத்த தெரிவில் 9.98% ஆகும்)

கிரானா: சாண்டியாகோ மீண்டு வருகின்றது, அது அதன் மக்களின் விருப்பம்


(வால்டர் லிப்மேன்)

சேதமடைந்த வீடுகளை சரிசெய்ய சில வளங்கள் ஏற்கனவே சமூகங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன.
குவாமா, சாண்டியாகோ டி கியூபா.–தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (CDN) தலைவர் மிகுவல் டியாஸ்-கேனல் பெர்முடெஸ், கிழக்கு கியூபாவில் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளை இந்த நகராட்சியில் தொடங்கினார், அங்கு சூறாவளி மெலிசா கரையைக் கடந்து முழு அழிவு சக்தியுடன் தாக்கியது, பல இடங்களில் கடல் நீரை ஆறுகளின் நீரை இணைத்து.

ஆலங்குளம்: இடர்கள் தாண்டி வாழும் பூர்வீக கிராமம்

(விஜயரெட்ண)

​மட்டக்களப்பு – பொலன்னறுவ வீதியில், ஓட்டமாவடியைத் தாண்டி, நாவலடிச் சந்தியைக் கடந்தால் தென்படும் கிராமம் ஆலங்குளம். பிரதான வீதியில் இருந்து வடக்கே இரண்டரைக் கிலோ மீற்றருக்கு வீடுகள் கொண்ட கிராமம். இந்தப் பூர்வீகக் கிராமத்திற்கு, திருக்கொண்டியாமடு என்ற இன்னொரு பெயருமுண்டு.

அமெரிக்காவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கியது சீனா

அமெரிக்காவிற்கான முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடையை சீனா தற்காலிகமாக நீக்கியுள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சகம், 2024 இல் அறிவித்திருந்த முக்கிய உலோகங்களான கலியம், ஜெர்மேனியம், அன்டிமனி மற்றும் சூப்பர்-ஹார்ட் பொருள்களின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி தடையை 2025 நவம்பர் 9 முதல் 2026 நவம்பர் 27 வரை தற்காலிகமாக நீக்கியுள்ளது.