ட்ரிப்அட்வைஸரின் பயணிகளின் தெரிவான சிறந்ததில் சிறந்த இட விருதுகளின்படி 2026க்கான உலகின் முதல் 10 தேனிலவு இடங்களில் காலி ஐந்தாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் சிறந்த தேனிலவு இடமாக இந்தோனேஷியத் தீவான பாலி காணப்படுகின்றது.
Month: January 2026
78வது தேசிய சுதந்திர தின வைபவம் சுதந்திர சதுக்கத்தில் நடத்த தீர்மானம்
இந்த ஆண்டுக்கான சுதந்திர தினத்தின் தேசிய வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 78வது , தேசிய சுதந்திர தின வைபவம் பிப்ரவரி 4 ஆம் திகதி காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் 22.8 சதவீத மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள AI
பெண்களே ரீல்ஸ் போடனுமா இனிமேல் கவனமாக இருங்கள்…
தனியார் துறையில் குறைந்தபட்சம் சம்பளம் அதிகரிப்பு
“மலையக காணி உரிமையை GSP நிபந்தனையாக்கவும்”
திட்வா புயலுக்கு பின் இலங்கை மீள்-கட்டெழுப்பல் (Rebuilding Sri Lanka) வேலைத்திட்ட காணி வழங்கல் மற்றும் வீடு கட்டல் ஆகிய அரசாங்க செயற்பாடுகளில், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் பாரபட்சம் காட்டுகிறது என சுட்டிக்காட்டிய மனோ கணேசன் எம்.பி, மலையக காணி உரிமையை வழங்குவதற்காக, ஜிஎஸ்பியை நிபந்தனையாக்குக என தனது பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பெர்ட்டிடனம் தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
6 மாதங்களுக்கு ஊக்குவிப்பு: அதன்பின்னர் வங்கியில் வைப்பு
தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான 2026 வரவு-செலவு திட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான முறைமை பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான நாளாந்த சம்பளத்தை வழங்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஆகக்குறைந்த சம்பளத்தை ரூபாய் 1,550/-வரை அதிகரித்தல் மற்றும் வருகைக்கான நாளாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவாக அவர்களுக்கு ரூபா 200/- வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2026 வரவுசெலவு திட்டத்தில் முன்மொழிந்துள்ளார்.
புத்தர் சிலை விவகாரம்: 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.